அமெரிக்காவே இலக்கு: சர்வதேசத்தை திரும்பிப் பார்க்கவைத்த வடகொரியாவின் நகர்வு
அமெரிக்கா, தென்கொரியாவை அழிக்கும் போர்த்திறனை உருவாக்க வேண்டும் என வடகொரிய இராணுவத்துக்கு அந்நாட்டு ஜனாதிபதி கிம் ஜாங் அன் உத்தரவிட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
வடகொரியா ஜனாதிபதி அந்நாட்டு அணு ஆயுத இராணுவ தளத்துக்கு சென்று ஆய்வுகளை மேற்கொண்டபோதே இதனை கூறியுள்ளார்.
கொரிய கடல் பகுதியில் ஏவுகணை மற்றும் அணு ஆயுத சோதனைகள் மூலம் வடகொரியா அவ்வப்போது பதற்றத்தை ஏற்படுத்துகின்றது.
இதனால் தங்களது பாதுகாப்பு கருதி தென்கொரியாவும், ஜப்பானும் அமெரிக்காவுடன் இணைந்து கூட்டுப்போர் பயிற்சியில் ஈடுபடுகின்றன.
கிம் ஜாங் அன் எச்சரிக்கை
இந்நிலையில் தங்களுக்கு எதிரான போர் ஒத்திகையாக வடகொரியா இதனை கருதுகிறது.
இதன்படி தங்களை எதிர்க்கும் நாடுகள் முற்றிலும் அழிக்கப்படும் என வடகொரியா தலைவர் கிம் ஜாங் அன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இதற்கமைய தென்கொரியா மீண்டும் அமெரிக்காவுடன் இணைந்து கூட்டுப்போர் பயிற்சியை ஆரம்பித்துள்ளமை கொரிய பதற்றத்தை மேலும் வலுப்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.

வெடுக்குநாறி ஆலய நிர்வாகத்தினரை துப்பாக்கியால் சுட்டு கைது செய்ய உத்தரவிட்ட பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

ஜீ தமிழில் சரிகமப-டான்ஸ் ஜோடி டான்ஸ் நிகழ்ச்சிகளின் மகா சங்கமம்... மேடையில் நடந்த எமோஷ்னல் சம்பவம் Cineulagam

இந்த மாதங்களில் பிறந்த ஆண்கள் திருமணத்தின் பின் கோடிஸ்வரயோகம் பெறுவார்களாம்! நீங்க எந்த மாதம்? Manithan
