வட கொரியாவிலிருந்து வெளியேறிய பெண் கூறிய அதிர்ச்சி தகவல்
உலகின் மர்ம பிரதேசமாக உள்ள வடகொரியாவில்(North Korea), விசித்திரமான சட்டங்கள் உள்ளது.
இந்தநிலையில், வட கொரியாவில் இருந்து வெளியேறியதாக சொல்லப்படும் பெண் ஒருவர் கூறிய தகவல்கள் அதிர்ச்சியளிக்கின்றது.
வடகொரியாவில் இருந்து வெளியேறிய பெண்ணுடன் சமூகவலைத்தளப் பிரபலம் ஜோ ரோகன் நடத்திய உரையாடலின் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
கிம் ஜாங் உன்
இது தொடர்பில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது,
வடகொரியாவில் அனைவரது வீடுகளிலும் கிம் ஜாங் உன்(Kim Jong Un) படத்தை வைத்து இருக்க வேண்டும்.
ஒரு தூசு கூட படியாமல் அந்த படம் இருக்க வேண்டும். திடீரென நள்ளிரவில் கூட வந்து அதிகாரிகள் வீட்டை தட்டி படத்தில் தூசு இருக்கிறதா? என பார்ப்பார்கள்.
அந்த புகைப்படத்தில் ஏதாவது அழுக்கு இருந்தால் அது அரசுக்கு விசுவாசமில்லாத செயலாக கருதப்பட்டு, அந்த நபர் உடனடியாக கைது செய்யப்படுவார். மரண தண்டனை கூட இதற்கு விதிக்கப்படலாம்.
அல்லது குடும்பத்தில் மூன்று தலைமுறையினருக்கு கடுங்காவல் தண்டனை விதிக்கப்படும். ஒருவேளை வீடு தீப்பிடித்தால், கிம் ஜாங் உன் படத்தை தான் முதலில் காப்பாற்ற வேண்டும்.
அதன் பிறகே உயிரை காப்பாற்றிக்கொள்வது பற்றி யோசிக்க வேண்டும்" என்று குறிப்பிட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |