கனடாவில் முக்கிய பொறுப்பில் நியமிக்கப்பட்ட இலங்கைத் தமிழர்கள்
கனடாவில் முக்கிய பொறுப்புகளில் இலங்கையை சேர்ந்த தமிழர்கள் ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர்.
இந்நிலையில் தமிழர்கள் அதிகம் செறிந்து வாழும் பகுதியிலுள்ள வைத்தியசாலைக்கு இலங்கையை சேர்ந்த தமிழர்கள் இருவர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
Scarborough Health Network வைத்தியசாலைகளில் இரண்டு பிரதான பொறுப்புகளில் இவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
சுகாதார தலைமை பொறுப்பு
கடந்த ஆறாம் திகதி இவர்களுக்கான நியமனம் வழங்கப்பட்டுள்ளது.

அதற்கமைய அவசர சிகிச்சை பிரிவின் புதிய தலைமை பதவியையும், வைத்திய இயக்குநர் பதவியையும் வைத்தியர் இளச்செழியன் அம்பலவாணர் ஏற்றுள்ளார்.
அத்துடன் அவசர சிகிச்சை பிரிவின் துணைத் தலைவராக வைத்தியர் மயோரேந்திரா ரவிச்சந்திரன் நியமிக்கப்பட்டுள்ளார்.
குறித்த இரண்டு தமிழர்களும் சுகாதார தலைமை பொறுப்புகளில் நீண்ட கால அனுபவம் கொண்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
கணவரை பிரிந்த நிலையில் ஹன்சிகா எங்கே சென்றிருக்கிறார் பாருங்க.. அதுவும் யாருடன் தெரியுமா? Cineulagam
2011ஆம் ஆண்டு தீபாவளிக்கு வெளிவந்த வேலாயுதம், 7ஆம் அறிவு.. பாக்ஸ் ஆபிஸ் வசூல் எவ்வளவு தெரியுமா Cineulagam
இந்தியாவுக்கு எதிராக புலம்பெயர் டாக்சி ஓட்டுநரின் மகன்: அவுஸ்திரேலிய அணியில் இந்திய வம்சாவளி பவுலர் News Lankasri