வடக்கு மாகாண அரச சாரதிகளின் இரண்டவாது நாள் தொடர் போராட்டம்

Sri Lankan protests Government Employee Northern Province of Sri Lanka
By Theepan Jun 04, 2024 10:48 AM GMT
Report

வடக்கு மாகாண (Northen Province) அரச சாரதிகள் தமக்கான இடமாற்றம் வழங்கப்படாமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து முன்னெடுத்துள்ள தொடர் போராட்டம் இரண்டாவது நாளாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. 

குறித்த போராட்டமானது, யாழ். (Jaffna) கைதடியில் அமைந்துள்ள வடக்கு மாகாண பிரதம செயலர் அலுவலகத்திற்கு முன்பாக பந்தல் அமைத்து இன்று (04.06.2024) முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.  

வடக்கு மாகாணத்தில் 5 வருடங்களாக தடைப்பட்டிருந்த சாரதிகளுக்கான இடமாற்றத்திற்கு பிரதிப் பிரதம செயலரால், கடந்த வருடம் விண்ணப்பம் கோரப்பட்டு இடமாற்ற பட்டியலும் வெளியிடப்பட்டிருந்தது.

தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள வடக்கு மாகாண அரச சாரதிகள்

தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள வடக்கு மாகாண அரச சாரதிகள்

இடைநிறுத்தப்பட்ட இடமாற்றம்

ஆளுநரின் கோரிக்கைக்கமைய அந்த இடமாற்றம் இடைநிறுத்தப்பட்ட நிலையில், அரச சாரதிகள் கடந்த பெப்ரவரி மாதத்தில் போராட்டத்தில் ஈடுபட தீர்மானித்தனர்.

வடக்கு மாகாண அரச சாரதிகளின் இரண்டவாது நாள் தொடர் போராட்டம் | North Govenment Bus Drivers 2Nd Day Protest

இதனைத் தொடர்ந்து, இடைநிறுத்தப்பட்ட இடமாற்றம்,  ஜூன் மாதம் முதலாம் திகதி முதல் நடைமுறைப்படுத்தப்படும் என பிரதி பிரதமர் செயலர் எழுத்து மூலம் உறுதிமொழி வழங்கி இருந்தார்.

எனினும், குறிப்பிட்ட திகதி வரை இடமாற்றம் நடைமுறைப்படுத்தப்படாத நிலையில், அரச சாரதிகள் சங்கம் நேற்று முதல் எதிர்வரும்  7ஆம் திகதி வரை தொடர் போராட்டத்தில் ஈடுபடுவதாக அறிவித்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்தியாவில் பலம் இழந்த நிலையில் மீண்டும் ஆட்சியமைக்கும் பாஜக

இந்தியாவில் பலம் இழந்த நிலையில் மீண்டும் ஆட்சியமைக்கும் பாஜக

தொடரும் போராட்டம்

இந்நிலையில், தீர்வு கிடைக்கும் வரை போராட்டம் தொடரும் என அரச சாரதிகள் சங்கத்தினர் தெரிவித்துள்ளதுடன் நேற்று காலையில் ஆளுநர் அலுவலகம் முன்பாக போராட்டத்தில் ஈடுபட்ட அரச சாரதிகள் சங்கத்தினர் ஆளுநருக்கு மனு ஒன்றினை அவரின் பிரதிநிதியிடம் கையளித்துள்ளனர். 

வடக்கு மாகாண அரச சாரதிகளின் இரண்டவாது நாள் தொடர் போராட்டம் | North Govenment Bus Drivers 2Nd Day Protest

மேலும், அவர்கள் தற்போது கைதடியில் அமைந்துள்ள பிரதமர் செயலர் அலுவலகம் முன்பாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

அரச நியமனத்திற்காக காத்திருக்கும் 8400 ஊழியர்களுக்கு நேர்முகத்தேர்வு

அரச நியமனத்திற்காக காத்திருக்கும் 8400 ஊழியர்களுக்கு நேர்முகத்தேர்வு

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW  
GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், செங்காளன், Switzerland

08 Oct, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, நந்தாவில்

12 Oct, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, யாழ்ப்பாணம், சுழிபுரம், Bobigny, France

21 Sep, 2025
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Markham, Canada

05 Oct, 2026
மரண அறிவித்தல்

கந்தர்மடம், Richmond Hill, Canada

07 Oct, 2026
மரண அறிவித்தல்

Tellipallai, கொழும்பு, யாழ்ப்பாணம், வவுனியா, Ontario, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொழும்புத்துறை மேற்கு, சென்னை, India

23 Sep, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி

எழுதுமட்டுவாள் தெற்கு, Zürich, Switzerland

26 Sep, 2022
மரண அறிவித்தல்

வல்வெட்டி, Toronto, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வவுனியா, இரணைஇலுப்பைக்குளம், Toronto, Canada

08 Sep, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Richmond Hill, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Basel, Switzerland

05 Oct, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Chur, Switzerland

05 Oct, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன்

08 Oct, 2011
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை, Vaughan Ontario, Canada

03 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பிரான்ஸ், France

02 Oct, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, கொய்யாத்தோட்டம், Toronto, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Villeneuve-Saint-Georges, France

30 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US