அமெரிக்காவின் பொறிக்குள் சிக்கியுள்ள இலங்கை - செய்வதறியாது தவிக்கும் அநுர அரசு
ஹோர்முஸ் நீரிணையில் நிலவும் போர் நிலைமைகள் காரணமாக இலங்கையை அண்மித்த கடற்பரப்பில் ஈரானியக் கப்பல்கள் நங்கூரமிட்டுள்ள நிலையில், இலங்கைக்கு கடுமையான அழுத்தங்களை அமெரிக்கா கொடுத்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்நிலையில் சர்வதேச தடைகளுக்கு உட்பட்ட ஈரானியக் கப்பல்களில் இலங்கையர்கள் எவரும் பணியாற்றவில்லை என அரசாங்கம் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.
குறித்த கப்பல்களில் உள்ளூர் ஊழியர்கள் எவரும் இருப்பதாக இதுவரை அரசாங்கத்திற்கு உத்தியோகபூர்வ தகவலும் கிடைக்கப்பெறவில்லை என துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து பிரதி அமைச்சர் ஜனித ருவன் கொடித்துவக்கு தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவின் கடும் அழுத்தம்
கப்பல்களுக்கு அத்தியாவசிய விநியோகங்களை வழங்குவது தொடர்பில் அரசாங்கம் இதுவரை எவ்வித தீர்மானமும் எடுக்கவில்லை. இதனை வெளிவிவகார அமைச்சு ராஜதந்திர ரீதியில் கையாண்டு வருகிறது.

தனியார் துறை விநியோகஸ்தர்கள் பொருட்கள் வழங்குவதை அரசாங்கம் நேரடியாகத் தடை செய்யவில்லை. ஆனால், அமெரிக்க தடைகள் நடைமுறையிலுள்ள பின்னணியில் இவ்வாறான விநியோகங்களில் ஈடுபடும் நிறுவனங்கள் சர்வதேச நிதி அல்லது வங்கி முறைமைகள் சார்ந்த இரண்டாம் நிலைத் தடைகளுக்கு முகங்கொடுக்க நேரிடலாம் என அரசாங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
எனவே, இத்தகைய நடவடிக்கைகளில் உள்ள அபாயம் மற்றும் பொறுப்பு குறித்த தனியார் நிறுவனங்கயே சாரும்.
இலங்கை எல்லைக்கு அப்பால் உள்ள சர்வதேச கடல் பகுதியில் ஈரானியக் கப்பல்கள் உள்ளிட்ட வெளிநாட்டுக் கப்பல்கள் பல நாட்களாக நங்கூறமிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
உண்மையாக நேசிக்கும் ரிஷப ராசிக்காரர்களின் மறுபக்கம் தெரியுமா? இவர்களை பிரிந்தால் இழப்பு உங்களுக்குத்தான்! Manithan
என் அப்பா பார்த்துக்கொள்வார்; 3 பேரை கார் ஏற்றிக்கொன்ற பின் திமிராக பேசிய 19 வயது இளைஞர் News Lankasri