அரசியல்வாதிகளுக்கு சிறையில் சிறப்பு சலுகைகளா! விளக்கும் அமைச்சர்
அரசியல்வாதிகள் மற்றும் முக்கிய பிரமுகர்களுக்கு சிறைச்சாலையில் விசேட சிறப்பு சலுகைகள் எதுவும் வழங்கப்படவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.
சிறையிலடைக்கப்படும் அரசியல்வாதிகளின் பாதுகாப்பிற்காக அவர்களுக்கு சிறப்புப் பாதுகாப்பினை வழங்குவதற்குச் சிறைச்சாலைகள் திணைக்களம் கடமைப்படவில்லை என நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார தெரிவித்துள்ளார்.
சிறைச்சாலையிலுள்ள ஏனைய கைதிகளுக்கு வழங்கப்படும் பொதுவான பாதுகாப்பே அரசியல்வாதிகளுக்கும் வழங்கப்படும் எனக் குறிப்பிட்டுள்ளார்.

அவர்களுக்கு வழங்கப்படும் உணவு மற்றும் பானங்களிலும் எந்தவித சிறப்புச் சலுகையோ அல்லது விசேட மாற்றங்களோ இருக்காது என அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
அண்மைய நாட்களாகவே எதிர்க்கட்சியைச் சேர்ந்த பல முக்கிய அரசியல்வாதிகள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
ஊழல் மோசடி குற்றச்சாட்டுக்களின் அடிப்படையில் நாடாளுமன்ற உறுப்பினர் உறுப்பினர் நாமல் ராஜபக்ச உள்ளிட்ட சில முக்கிய அரசியல் பிரமுகர்கள் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.