மத்திய வங்கியின் மீது அழுத்தங்களை பிரயோகிக்க இடமளிக்கப்படாது:சஜித்
மத்திய வங்கியின் மீது அழுத்தங்களை பிரயோகிக்க இடமளிக்கப்படாது என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றில் இன்று உரையாற்றும் போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
மத்திய வங்கியை சுயாதீனமாக்கும் சட்டம்
அவர் மேலும் கூறுகையில்,மத்திய வங்கி ஆளுனர், நிதி அமைச்சின் செயலாளர் மற்றும் திறைசேரியின் செயலாளர் ஆகியோரின் செயற்பாடுகள் குறித்து விமர்சனங்கள் இருக்கின்றன. அதனை மறுக்கவில்லை, எனினும் பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்த அவர்கள் முயற்சிக்கின்றார்கள்.
மத்திய வங்கி நடுப் பகலில் கொள்ளையிடப்பட்டது. பிரதமரும் இதனை நன்கு அறிவார். அந்தக் கும்பல் தங்களது நலன் விரும்பிகளை அல்லது நண்பர்களை மத்திய வங்கி ஆளுனராக்க முயற்சிக்கின்றது. மீண்டும் மத்திய வங்கியை கொள்ளையிட முயற்சிக்கின்றனர்.
மத்திய வங்கியை சுயாதீனமாக்கும் சட்டங்களை நாடாளுமன்றில் கொண்டு வர வேண்டுமென சஜித் தெரிவித்துள்ளார்.