பயங்கரவாத தடைச்சட்டம் கீழ் கைது செய்யப்பட்டவர்கள்! நீதியமைச்சின் அதிரடி அறிவிப்பு
புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலம் கொண்டுவரப்பட்டாலும், தற்போது நடைமுறையில் உள்ள பயங்கரவாத தடைச்சட்டம் (PTA) கீழ் கைது செய்யப்பட்டவர்களுக்கு எந்தவித நிவாரணங்களும் வழங்கப்படமாட்டாது என நீதி அமைச்சு தெரிவித்துள்ளது.
எனினும், பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு, இதுவரை வழக்கு தாக்கல் செய்யப்படாதவர்களைக் குறித்து தகவல்கள் கிடைத்தால், அவற்றை ஆராய நடவடிக்கை எடுக்கப்படும் என நீதி அமைச்சர் ஹர்ஷண நாணயக்கார தெரிவித்துள்ளார்.
வழக்கு விசாரணை
புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலம் தொடர்பில் தனியார் ஊடகமொன்றுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அதன்படி, முன்மொழியப்பட்ட புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலம் குறித்து பொதுமக்கள், அரசியல் கட்சிகள் மற்றும் சிவில் சமூக அமைப்புகள் உள்ளிட்ட பல தரப்பினரும் தங்களது கருத்துகளையும் யோசனைகளையும் முன்வைத்து வருகின்றனர்.
இந்த நிலையில், எதிர்வரும் பெப்ரவரி 28ஆம் திகதி வரை கருத்துகளை முன்வைப்பதற்கான கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளதாகவும், அதன் பின்னர் சட்டவரைபுக் குழுவை கூட்டி, அடுத்த கட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் எனவும் நீதி அமைச்சர் குறிப்பிட்டார்.
இதனிடையே, தற்போது நடைமுறையில் உள்ள பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டவர்களில் சிலர், வழக்கு விசாரணைகளின் அடிப்படையில் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
இனத்தில் அடிப்படையில் வீடு வாடகைக்கு விட மறுக்கும் ஜேர்மானியர்கள்: கவனம் ஈர்த்துள்ள ஒரு வழக்கு News Lankasri