என்னதான் ஆட்டங்கள் போட்டாலும் அரசை கவிழ்க்கவே முடியாது: எதிரணிக்கு ரோஹித பதிலடி
"முடிந்தால் விவசாயத்துறை அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமவுக்கு(Mahindananda Aluthgamage) எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணையைக் கொண்டு வாருங்கள். அரசின் பலத்தைக் காட்டுகின்றோம்." என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸவுக்கு( Sajith Premadasa) அமைச்சர் ரோஹித அபேகுணவர்தன( Rohitha Abegunawardhana) சவால் விடுத்துள்ளார்.
அத்துடன், விவசாயிகளைப் பயன்படுத்தி எதிரணிகள் போராட்டம் நடத்துகின்றன எனவும், இதன் பின்னணியில் முழுமையாக அரசியலே இருக்கின்றது எனவும் ஊடகங்களிடம் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
என்னதான் ஆட்டங்கள் போட்டாலும் மக்களின் அமோக ஆணையால் அமைக்கப்பட்ட மூன்றிலிரண்டு பெரும்பான்மை அரசை எவராலும் கவிழ்க்கவே முடியாது எனவும் அமைச்சர் ரோஹித அபேகுணவர்தன மேலும் கூறியுள்ளார்.
அதேவேளை, நாட்டை மீண்டும் 1988 - 1989 யுகத்தை நோக்கி அழைத்துச் செல்வதற்குச்
சிலர் முற்படுகின்றனர் என அமைச்சர் நாமல் ராஜபக்ச(Namal Rajapaksa) ஜே.வி.பியினரை மறைமுகமாகச் சாடியுள்ளார்.
கணவர் Gay! திருமணத்திற்குப் பிறகு வெளிவந்த ரகசியம்: தம்பதியின் வித்தியாசமான முடிவுக்கு குவியும் பாராட்டு Manithan
பிரித்தானிய வரலாற்றில் நடந்த மிகப்பெரிய கொடுமை., தாய்மார்களிடம் மன்னிப்பு கேட்ட பிரதமர் News Lankasri
பிரான்சில் கைது செய்யப்பட்ட ஆட்கடத்தல்காரர்: ஊடகவியலாளர்கள் கண்டுபிடித்த அதிரவைக்கும் தகவல் News Lankasri
போட்றா வெடிய, விஜய்யின் ஜனநாயகன் படத்திற்கு கிடைத்த தணிக்கை சான்றிதழ்... ரிலீஸிற்கு தயாரான படம் Cineulagam