சர்வதேச நாணய நிதியத்திடம் மீண்டும் செல்லும் உத்தேசம் இல்லை! அரசாங்கம் அறிவிப்பு
மீண்டும் சர்வதேச நாணய நிதியத்திடம் உதவி கோரும் உத்தேசம் அரசாங்கத்திடம் இல்லை என்று அரசாங்கம் அறிவித்துள்ளது.
நேற்று(27) இரவு தனியார் தொலைக்காட்சியொன்றில் ஒளிபரப்பப்பட்ட அரசியல் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு , கைத்தொழில் பிரதி அமைச்சர் சதுரங்க அபேசிங்க குறித்த தகவலை வெளியிட்டுள்ளார்.
சர்வதேச நாணய நிதியம்
அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், சர்வதேச நாணய நிதியத்தின் விரிவான கடன் வசதி திட்டத்தின் கீழான கடன் வசதிகள் விரைவில் முடிவடையவுள்ளன.

எனினும் தற்போதைய அரசாங்கம் மீண்டும் சர்வதேச நாணய நிதியத்திடம் உதவி கோரும் என எதிர்பார்க்கவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.
இருப்பினும், இந்நிகழ்ச்சியில் பங்கேற்ற நாடாளுமன்ற உறுப்பினர் அஜித் பி. பெரேரா, சர்வதேச நாணய நிதியத்துடனான தொடர்ச்சியான ஒத்துழைப்பு நாட்டின் பொருளாதார நிலைத்தன்மைக்கு பெரும் உந்துதலாக அமையும் என்று வலியுறுத்தியுள்ளார்.
ஐரோப்பாவுக்கு கடும் பின்னடைவு... மிகப்பெரிய திட்டமொன்றைக் கைவிட்ட ஜேர்மனியும் பிரான்சும் News Lankasri
ஆபத்தில் சிக்கிய குணசேகரன், விசாலாட்சி பேச்சால் குழப்பத்தில் ஈஸ்வரி... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam