குற்றங்களின் எண்ணிக்கையில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பு இல்லை: அரசாங்கம்
அண்மைய காலங்களில் குற்றங்களின் எண்ணிக்கையில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பு எதுவும் இல்லை என்று பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால (Ananda Wijepala) தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றில் இன்றையதினம் (27) எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவின் (Sajith Premadasa) கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பி்ட்டுள்ளார்.
குற்றங்கள்
அவர் மேலும் தெரிவிக்கையில் ,இந்த ஆண்டின் முதல் இரண்டு மாதங்களில் 14 குற்றச் சம்பவங்கள் பதிவாகியுள்ளன 2024 ஆம் ஆண்டின் முதல் இரண்டு மாதங்களில் 14 சம்பவங்களும் பதிவாகியுள்ளது.
அதேவேளை, 2016 மற்றும் 2018 ஆம் ஆண்டின் முதல் இரண்டு மாதங்களில் தலா 12 சம்பவங்கள் பதிவாகியுள்ளன.
கடந்த கால குற்றங்கள் குறித்த தரவுகளின்படி, இந்த ஆண்டின் முதல் இரண்டு மாதங்களிலும் அதைப் போன்ற நிலைமையே காணப்படுவதாக ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |