மட்டக்களப்பு மாவட்டத்தில் எரிபொருள் தட்டுப்பாடு இல்லை: அரசாங்க அதிபர் அறிவிப்பு
மட்டக்களப்பு மாவட்டத்தில் எரிபொருள் தட்டுப்பாடு இல்லை என மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் ஜே.ஜே. முரளிதரன் தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் பல எரிபொருள் நிரப்பு நிலையங்களில் மக்கள் அதிகமாக காணப்படுவது தொடர்பாக மாவட்ட அரசாங்க அதிபரிடம் வினவிய போது அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
குறித்த எரிபொருள் நிரப்பு நிலையங்களில் இன்று எரிபொருளைப்பெற்றுக்கொள்வதற்கு நீண்ட வரிசையில் மக்கள் காத்திருப்பதை காணமுடிகின்றது.
எரிபொருள் தட்டுப்பாடு
ஈரான் - இஸ்ரேல் மோதல் நிலைமைகள் காரணமாக இலங்கையில் பெற்றோல் தட்டுப்பாடுகள் ஏற்படலாம் என்ற அச்சம் காரணமாக மக்கள் பெற்றோல் நிரப்பு நிலையங்களில் முண்டியடிப்பதை காண முடிகின்றது.
மட்டக்களப்பு நகரில் உள்ள அனைத்து எரிபொருள் நிரப்பு நிலையங்களிலும் மக்கள் நீண்ட வரிசையில் நின்று எரிபொருளைப் பெற்றுக்கொள்வதை காண முடிகின்றது.
இந்தநிலையிலேயே, எவ்விதமான எரிபொருள் தட்டுப்பாடும் இல்லை.மக்கள் வீணாகச் சென்று மக்கள் வரிசையில் நிற்க வேண்டாம் என மாவட்ட அரசாங்க அதிபர் ஜே.ஜே. முரளிதரன் தெரிவித்துள்ளார்.
அதேவேளை, ஈரான் - இஸ்ரேலில் தொடரும் யுத்த நிலைமையினால் எரிபொருளுக்கு பாரிய தட்டுப்பாடு ஏற்படும் என்ற அச்சத்தில் எரிபொருள் நிரப்பு நிலையங்களில் நீண்ட வரிசையில் மக்கள் எரிபொருளை பெற்றுக்கொள்ள காத்திருப்பதையும் அவதானிக்க முடிந்தது.
இரண்டு மணித்தியாலங்களுக்கு மேலாக நீண்ட வரிசையில் நின்று தாம் எரிபொருளை பெற்றுக்கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனர். இதன் போது நாடளாவிய ரீதியிலும் எரிபொருளுக்காக நீண்ட வரிசையில் மக்கள் காத்திருப்பதை யும் அவதானிக்க முடிகின்றது.
மேலதிக தகவல் -குமார்
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |








