இலங்கைக்கு வருகை தந்த வரலட்சுமி சரத்குமார்...!
பிரபல இந்திய திரைப்பட நடிகையான வரலட்சுமி சரத்குமார் இன்று இலங்கை வந்துள்ளார்.
சர்வதேச திரைப்படமொன்றின் படப்பிடிப்பிற்காக அவர் இலங்கை வந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமோக வரவேற்பு
இதன்போது கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் அவருக்கு அமோக வரவேற்பளிக்கப்பட்டது.

அத்துடன் இந்திய நடிகர் மோகன்லால் விஸ்வநாதன்(Mohanlal) மற்றும் மலையாள நடிகர் குஞ்சாக்கோ போபன் ஆகியோர் படப்பிடிப்பிற்காக நேற்று முன்தினம்(15) இலங்கைக்கு வருகை தந்தனர்.
"பேட்ரியட்" (Patriot) எனும் திரைப்படத்தின் மூன்று நாட்கள் படப்பிடிப்பில் கலந்துகொள்வதற்காக அவர்கள் வருகை தந்ததாகவும் இந்த திரைப்படம் இந்தியாவின் எட்டு மொழிகளில் Pan-India திரைப்படமாக வெளியாகும் வகையில் தயாராகி வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புவிசார் அரசியலை புரிந்து கொள்ள தலைப்படும் தமிழ் தலைமைகள் 30 நிமிடங்கள் முன்
இந்தியாவில் சிக்கித் தவிக்கும் H-1B ஊழியர்கள்... விசா புதுப்பித்தல் சந்திப்புகள் ரத்து News Lankasri
பணத்தை திருடும் போது நிலாவிடம் வசமாக சிக்கிய பல்லவன் அம்மா, அடுத்து நடந்தது... அய்யனார் துணை சீரியல் புரொமோ Cineulagam