சனல் - 4 ஊடகத்திற்கு தேவையானவாறு நாம் ஆடத் தேவையில்லை: ரணிலை ஆதரித்த மகிந்தவின் குரல்
சனல் - 4 ஊடகத்திற்கு தேவையானவாறு நாம் ஆட வேண்டியதில்லை என முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
கொழும்பு கோட்டை சம்புத்தாலோக்க விகாரைக்கு இன்று(04.10.2023) சென்றிருந்த மகிந்த ராஜபக்சவிடம் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்து போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மேற்குலக ஊடகங்களுக்கு கடுந்தொனியில் பேசியதனை வரவேற்பதாகத் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஜனாதிபதிக்கு ஆலோசனை
தாம் என்றைக்குமே மக்களின் பக்கம் இருப்பதாகவும் மக்கள் துன்பத்தில் வாழ்வதின் காரணத்தினால் அவர்களுக்கு நிவாரணங்கள் வழங்கப்பட வேண்டுமென கோருவதாகவும் மகிந்த ராஜபக்ச கூறியுள்ளார்.
மேலும் தெரிவிக்கையில்,
'' தற்போதைய ஜனாதிபதிக்கு ஆலோசனை வழங்க முடியும். எனினும் அதனை பலவந்தமாக செய்ய முடியாது.
மக்களுக்கு நிவாரணங்களை வழங்குவது குறித்து ஜனாதிபதி ஆலோசனை கோரினால் அதனை வழங்கத் நான் தயார்.
தாம் ஆட்சி செய்தது போதும். தற்பொழுது புதிய தலைமைத்துவம் உருவாக வேண்டும். எனக்கு மீண்டும் ஆட்சிக்கு வரும் உத்தேசமில்லை'' என தெரிவித்துள்ளார்.