சிங்களத்தை மேலோங்க செய்வது தான் இந்த நாட்டின் சிந்தனையா..! சபையில் சிறீதரன் காட்டம்(Video)
பௌத்த விகாரைகளை கட்டுவது, தமிழர்களின் கோவில்களை இடிப்பது, தொடர்ந்தும் இனவாதியாக சிந்திப்பது மற்றும் சிங்களத்தை மேலோங்க செய்வது இது தான் இந்த நாட்டின் சிந்தனையா? என நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் கேள்வியெழுப்பியுள்ளார்.
நாடாளுமன்றத்தில் இன்றையதினம் (04.10.2023) உரையாற்றும்போதே இவ்வாறு தெரிவித்துள்ளார். மேலும் அவர் தெரிவிக்கையில்,
உயிர் அச்சுறுத்தல் காரணமாக தனது பதவியை துறந்து இந்த நாட்டை விட்டு வெளியேறிய முல்லைத்தீவு நீதவான் விவகாரத்திற்கு நீதிகோரி தமிழர் பகுதியில் மனித சங்கிலி போராட்டமும் சட்டத்தரணிகளின் போராட்டமும் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
ஆனால் இந்த நாட்டிலே இருக்கின்ற தலைவர்களிடம் இது பற்றி சிந்தனை சிறிதளவேணும் இருப்பதாக எனக்கு தெரியவில்லை.
நீதியான ஒரு செயற்பாடு இல்லாமல் போகிறதும் நீதித்துறையை அவமதிக்கின்ற காரணத்தினாலும் தொடர்ந்து இந்த நாடு வங்குரோத்து நிலைக்கு செல்ல நேரிடும்.
மேலும் இது தொடர்பான முழுமையான கருத்துக்கள் கீழ்வரும் காணொளியில் பதிவாகியுள்ளது.