கோட்டாபயவை சூழும் தமிழர்களின் சாபங்கள் - ராஜபக்சர்கள் மீது பாய தயாராகும் கடுமையான சட்டம்

Gotabaya Rajapaksa Easter Attack Sri Lanka Ministry of Defense Sri Lanka
By Vethu Jun 19, 2026 05:06 AM GMT
Report

இலங்கையில் குறிப்பாக தமிழர்களுக்கு எதிராக பயங்கரவாத தடைச் சட்டம் கொண்டு வரப்பட்டு, பல்வேறு கொடுமைகள் தற்போது வரை அரங்கேற்றப்பட்டு வருகிறது.

இந்த சட்டத்தை கடுமையாக பிரயோகிக்கும் நடவடிக்கையை கடந்த காலங்களில் ராஜபக்சர்களே தீவிரமாக முன்னெடுத்திருந்தனர்.

அதில் முக்கியமான பங்கு வகித்தவர் பாதுகாப்பு செயலாளராக செயற்பட்ட கோட்டாபய ராஜபக்ச.

இலங்கையில் பரபரப்பை ஏற்படுத்திய இளம் பெண்ணின் படுகொலை - பொலிஸார் வெளியிட்ட பகீர் தகவல்கள்

இலங்கையில் பரபரப்பை ஏற்படுத்திய இளம் பெண்ணின் படுகொலை - பொலிஸார் வெளியிட்ட பகீர் தகவல்கள்

தமிழர்கள் சிறைகளில் நரக வேதனை

இன்றுவரையில் பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட தமிழர்கள் சிறைகளில் நரக வேதனையை அனுபவித்து வருகின்றனர்.

இவ்வாறான சூழ்நிலையில் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவும் பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்படும் நிலை தற்போது ஏற்பட்டுள்ளது.

இலங்கையை உலுக்கிய உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத தாக்குதலுடன் தொடர்புள்ளதாக கோட்டாபயவை கைது செய்ய அநுர அரசாங்கம் தயாராகி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 

கோட்டாபயவை சூழும் தமிழர்களின் சாபங்கள் - ராஜபக்சர்கள் மீது பாய தயாராகும் கடுமையான சட்டம் | No Evidence Against Gota    

தற்போது கடும் அச்சம் அடைந்துள்ள கோட்டாபய தனது கைது நடவடிக்கையினை தடுக்கும் தீவிர சட்ட போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.

தன்னை பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்து தடுத்து வைத்து விசாரணை மேற்கொள்ள வேண்டாம் என அறிவிக்குமாறு கோரி நீதிமன்றில் மனு தாக்கல் செய்துள்ளார்.

இந்நிலையில், உயிர்த்த ஞாயிறு தாக்குதலுடன் கோட்டாபய ராஜபக்ச தொடர்புடையவர் என்பதனை நிரூபிக்கும் எந்தவொரு ஆதாரமும் இதுவரை வெளியிடப்படவில்லை என ஜனாதிபதி சட்டத்தரணி ரொமேஷ் டி சில்வா தெரிவித்துள்ளார்.

கோட்டாபய ராஜபக்ச சார்பில் நேற்று நீதிமன்றத்தில் முன்னிலையான ஜனாதிபதி சட்டத்தரணி ரொமேஷ் டி சில்வா, இதனை குறிப்பிட்டுள்ளார். மேலும் சட்டத்திற்குப் புறம்பாக அவர் கைது செய்யப்பட்டால் அவரது சுதந்திரம் பறிக்கப்படும் என குறிப்பிட்டார்.

கோட்டாபயவிற்கு ஈஸ்டர் தாக்குதலுடன் தொடர்பில்லை: சட்டத்தரணி ரொமேஷ் டி சில்வா

கோட்டாபயவிற்கு ஈஸ்டர் தாக்குதலுடன் தொடர்பில்லை: சட்டத்தரணி ரொமேஷ் டி சில்வா

கோட்டாபயவை கைது செய்ய நடவடிக்கை

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பாக Channel 4 ஊடகத்தில் வெளியான தகவல்களின் அடிப்படையில், பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் தன்னை கைது செய்து தடுப்புக் காவலில் வைப்பதைத் தடுக்கும் உத்தரவை பிறப்பிக்குமாறு கோரி, முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனு  நேற்று பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே ஜனாதிபதி சட்டத்தரணி ரொமேஷ் டி சில்வா இதனைத் தெரிவித்தார்.

Channel 4 ஊடகத்தின் தகவல்களின் அடிப்படையில், உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பாக எந்தவொரு சந்தர்ப்பத்திலும்  பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் தனது கட்சிக்காரர் கைது செய்யப்படுவதற்கான அவதானம் காணப்படுவதாக சட்டதரணி குறிப்பிட்டுள்ளார்.

கோட்டாபயவை சூழும் தமிழர்களின் சாபங்கள் - ராஜபக்சர்கள் மீது பாய தயாராகும் கடுமையான சட்டம் | No Evidence Against Gota  

“தனது கட்சிக்காரர் அவ்வாறு கைது செய்யப்பட்டால் தடுப்புக் காவல் உத்தரவின் கீழ் வைக்கப்படும் அபாயம் உள்ளது. ஏற்கனவே கோட்டை நீதவானினால் அவரது வெளிநாட்டுப் பயணங்களுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

மேலும், தனது கட்சிக்காரர் ஜனாதிபதியாக இருந்த காலத்தில் குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் பணிப்பாளராகப் பணியாற்றியவரும், இந்த மனுவின் பிரதிவாதியுமான ஷானி அபேசேகர, போலிச் சாட்சிகளை உருவாக்கிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட ஒருவராகும். அதனால் அத்தகைய ஒருவரிடமிருந்து நியாயமான மற்றும் பக்கச்சார்பற்ற விசாரணையை எதிர்பார்க்க முடியாது.

சட்டமா அதிபர் திணைக்களம் குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் ஒரு கைப்பொம்மை போல நடந்துகொள்கிறது. மனுதாரர் கைது செய்யப்பட்டால் அவரது சுதந்திரம் கட்டுப்படுத்தப்படும். இதன் மூலம் அரசியலமைப்பில் குறிப்பிடப்பட்டுள்ள இயற்கை நீதியின் கோட்பாடு மீறப்படும்.

மனுதாரர் உயிர்த்த ஞாயிறு தாக்குதலுடன் தொடர்புடையவர் என்பதற்கான எந்தவொரு ஆதாரமும் இல்லை. எனவே, மனுதாரரைக் கைது செய்வது சட்டவிரோதமானது என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

கொழும்பின் புறநகர் பகுதியில் சுற்றிவளைப்பு - 34 பெண்கள் உட்பட 43 பேர் கைது

கொழும்பின் புறநகர் பகுதியில் சுற்றிவளைப்பு - 34 பெண்கள் உட்பட 43 பேர் கைது

பொலிஸ் திணைக்களத்தினால் விரைவில் அறிமுகம் செய்யப்படவுள்ள மொபைல் செயலி

பொலிஸ் திணைக்களத்தினால் விரைவில் அறிமுகம் செய்யப்படவுள்ள மொபைல் செயலி

மரண அறிவித்தல்

நெல்லியடி, India, Toronto, Canada

16 Sep, 2026
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Wembley, United Kingdom

18 Sep, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US