சபாநாயகருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு கையொப்பம் திரட்டும் பணிகள் ஆரம்பம்
நாடாளுமன்ற சபாநாயகர் ஜகத் விக்கிரமரத்னவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு கையொப்பங்கள் திரட்டும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
பாதுகாப்பு பிரதியமைச்சருக்கு எதிராக எதிர்க்கட்சிகள் முன்வைத்திருந்த நம்பிக்கையில்லாப் பிரேரணை அரசியலமைப்புக்கு பொருத்தமில்லாதது என்று தெரிவித்து சபாநாயகர் ஜகத் விக்கிரமரத்ன அதனை நிராகரித்திருந்தார்.
நாடாளுமன்ற உறுப்பினர்களின் கையொப்பம்
எனினும் நாடாளுமன்ற செயலாளர் அலுவலகம் மற்றும் சட்டமா அதிபர் ஆகியோரின் பரிந்துரைகளை மீறியே சபாநாயகர் குறித்த நம்பிக்கையில்லாப் பிரேரணையை நிராகரித்துள்ளமை தற்போது தெரியவந்துள்ளது.
அதன் காரணமாக அரசியலமைப்புக்கு முரணாக செயற்பட்டார் என்ற குற்றச்சாட்டை முன்னிறுத்தி சபாநாயகருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை ஒன்றை முன்வைக்க எதிர்க்கட்சிகள் தயாராகி வருகின்றது.
அதற்காக நாடாளுமன்ற உறுப்பினர்களின் கையொப்பம் திரட்டும் செயற்பாடுகள் இந்த வாரம் முன்னெடுக்கப்படவுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |



