எரிசக்தி அமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை : அரசாங்கத்தின் நிலைப்பாடு வெளியானது
எரிசக்தி அமைச்சர் குமார ஜயக்கொடிக்கு எதிராக எதிர்க்கட்சிகளால் கொண்டுவரப்பட்டுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணையை அரசு நாடாளுமன்றத்தில் வெற்றிகரமாகத் தோற்கடிக்கும் என்று வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்தார்.
எரிசக்தி அமைச்சர் குமார ஜயக்கொடிக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணை மீதான விவாதம் நாளை வெள்ளிக்கிழமை நாடாளுமன்றத்தில் நடைபெறவுள்ளது.
இது தொடர்பில் அரசின் நிலைப்பாட்டைத் தெரிவிக்கும்போதே அமைச்சர் விஜித ஹேரத் மேற்கண்டவாறு கூறினார்.
உரிய பதில்கள் வழங்கப்படும்
அவர் மேலும் தெரிவிக்கையில்,
அரசு என்ற ரீதியில் இந்த நம்பிக்கையில்லாப் பிரேரணையை எதிர்கொள்ளத் தயாராக இருக்கின்றோம். நாடாளுமன்றத்தில் எமக்குள்ள பெரும்பான்மை மற்றும் அமைச்சரின் வெளிப்படையான செயற்பாடுகளின் அடிப்படையில் இதனை நாம் வெற்றிகரமாக முறியடிப்போம் என குறிப்பிட்டுள்ளார்.

எரிசக்தித் துறையில் நிலவும் தற்போதைய சவால்கள் மற்றும் தீர்மானங்கள் குறித்து எதிர்க்கட்சிகள் முன்வைத்துள்ள குற்றச்சாட்டுகளுக்கு இவ்விவாதத்தின் போது உரிய பதில்கள் வழங்கப்படும் என்றும் அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.