இலங்கையில் தங்க நகை விற்பனையில் ஏற்பட்டுள்ள மாற்றம்
இலங்கையில் தங்க ஆபரணங்கள் விற்பனையில் பாரிய மாற்றம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
உலக சந்தையில் தங்கத்தின் விலைக்கு ஏற்ற வகையில் உள்நாட்டில் தங்க ஆபரணங்களின் விலைகள் உயர்வடைந்துள்ளன.
இவ்வாறு தங்க ஆபரணங்களின் விலைகளில் ஏற்பட்ட அதிகரிப்பு காரணமாக தங்க ஆபரணங்களின் விற்பனை 25 வீதத்தினால் வீழ்ச்சி அடைந்துள்ளது என தெரிவிக்கப்படுகிறது.
அதிகரித்த விலை..
அகில இலங்கை நகைக்கடை உரிமையாளர்கள் சங்கத்தின் செயலாளர் ராமன் சுப்பிரமணியம் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.
இலங்கையில் நேற்றைய தினம் 24 கரட்டைக் கொண்ட ஒரு பவுண் தங்கம் 4 லட்சத்து 5 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டதாகவும் இது நேற்று முன்தினத்துடன் ஒப்பிடும்போது 7 ஆயிரம் ரூபாய் அதிகம் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
அண்மைக் காலமாகவே உலக சந்தையிலும் இலங்கையிலும் தங்க ஆபரணங்களின் விலைகள் பாரிய அளவில் அதிகரித்து செல்லும் நிலைமையை அவதானிக்க முடிகின்றது.
இதனால் தங்க ஆபரண தொழிற்துறையில் ஈடுபட்டுள்ளவர்கள் நெருக்கடிகளை எதிர்நோக்கி வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
தங்க ஆபரணங்களை கொள்வனவு செய்வது வீழ்ச்சி அடைந்துள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
ஈரான் மீதான அமெரிக்க தரையிறக்க தாக்குதல் மூலோபாயம் எதுவரைக்கும் 21 மணி நேரம் முன்
தகாத உறவில் இருந்ததாக கூறிய பத்திரிக்கையாளர்... செருப்பால் அடிப்பேன் என விளாசிய தாமரைச் செல்வி Cineulagam
சிங்கப்பெண்ணே சீரியலில் ஆனந்தியாக நடிக்கும் மனீஷாவின் ஒருநாள் சம்பளம்... எவ்வளவு தெரியுமா? Cineulagam