வெள்ள அழிவிற்கு நட்ட ஈடு வழங்கப்படவில்லை! விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை
2025, 2026 ஏற்பட்ட வெள்ளத்தினால் ஏற்பட்ட பகுதி அளவான சேதங்களுக்கும், சில முழுமையான சேதங்களுக்கும் இன்னும் நஷ்ட ஈடு வழங்கப்படாமல் உள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட தேசிய கமக்காரர்கள் அதிகாரசபையின் தலைவர் சந்திரசேகரம் சந்திரமோகன் தெரிவித்தார்.
அத்தோடு, இந்த விடயத்தை கருத்தில் கொண்டு அரசாங்கம் உடனடியாக எங்களது விவசாயிகளுக்கு நஷ்ட ஈட்டினை வழங்குமாறும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மட்டு.ஊடக அமையத்தில் நேற்று (29.1.2016) இடம்பெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இதனைக் கூறியுள்ளார்.
நஷ்ட ஈடு
அவர் மேலும் தெரிவிக்கையில், அடுத்ததாக 2024, 2025 ஆம் ஆண்டு பெருவெள்ளம் காரணமாக ஏற்பட்ட அழிவுகளுக்கு நஷ்ட ஈடு விண்ணப்பங்கள் நாங்கள் கொடுத்தும் இன்று வரை அதற்கான நட்ட ஈடுகளும் வழங்கப்படாமல் உள்ளது.

அதனையும் அரசாங்கம் பரிசீலனை செய்து எமது மக்களுக்கு எமது விவசாயிகளுக்கு உரிய நஷ்ட ஈட்டை வழங்க வேண்டும் என கேட்டுக் கொள்கின்றோம்.
தற்போது 2025, 2026 ஏற்பட்ட வெள்ளத்தினால் பகுதி அளவான சேதங்களுக்கும் சில முழுமையான சேதங்களுக்கும் இன்னும் நஷ்ட ஈடு வழங்கப்படாமல் உள்ளது.
கிவுல் ஓயா திட்டம் மூலம் இனப்பரம்பலை மாற்றியமைக்க முயற்சி - போராட்டத்திற்கு சத்தியலிங்கம் எம்.பி அழைப்பு
உடனடியாக நடவடிக்கை
அதனையும் கருத்தில் கொண்டு அரசாங்கம் உடனடியாக அவற்றினையும் அந்த நஷ்ட ஈட்டினையும் எங்களது விவசாயிகளுக்கு உடனடியாக வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வினயமாக கேட்டுக் கொள்கின்றோம்.

அரசாங்கம் எமது நாட்டு நெல்லுக்கு 120 ரூபாய் அறிவித்து இருக்கின்றது. உண்மையில் அந்த விலை எங்களுக்கு போதுமானதாக இல்லை இருந்தாலும் அந்த நிர்ணயவிலை என்று சொல்லும்போது அரசாங்கம் அறிவித்தது நல்ல விடயம்.
இருந்தாலும் அந்த நெல் விலை போதுமானதாக இல்லை.எங்களது உற்பத்தி செலவுடன் ஒப்பிடும்போது அந்த நெல் விலை போதுமானதாக இல்லை எனத் தெரிவித்துள்ளார்.
சக்திக்கு வந்த ஷாக்கிங் தகவல், விசாலாட்சியை சுட துணிந்த கதிர்... எதிர்நீச்சல் தொடர்கிறது பரபரப்பு புரொமோ Cineulagam
Making Video: கூடவே வாழ்ந்த மாதிரி பேசுறீங்க... சுதா கொங்கராவிற்கு பதிலடி கொடுத்த சிவகார்த்திகேயன்! Manithan