மின்சார கட்டணத்தை அதிகரிப்பதற்கு அதிகாரம் இல்லை! சம்பிக்க ரணவக்க
மின்சார சபை சட்டம் மற்றும் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு சட்டத்தின் அடிப்படையில் இலங்கை மின்சார சபை, மின்வலு மற்றும் எரிசக்தி அமைச்சு அல்லது அமைச்சரவை அமைச்சர்களுக்கு மின்சார கட்டணத்தை அதிகரிப்பதற்கு அதிகாரம் இல்லை என குறிப்பிடப்பட்டுள்ளது.
அண்மையில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் வைத்து முன்னாள் அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.
கட்டணத்தை மாற்ற அதிகாரம் இல்லை
மேலும் தெரிவிக்கையில், கடந்த காலத்தை பாதிக்கும் வகையில் கட்டணத்தை மாற்றுவதற்கு இந்த தரப்புக்களுக்கு அதிகாரம் இல்லை.
எனினும் மின்சாரக் கட்டணத்தை அறிவிப்பதற்கான முழு அதிகாரமும் இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவிடம் உள்ளது.
எனவே பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு, பொது கலந்தாய்வை நடத்தி, கட்டண திருத்தத்தின் சதவீதத்தை முடிவு செய்யும்.
சட்டத்திற்கு முரணான அறிவிப்பு
இதன்படி ஜனவரி முதலாம் திகதி முதல் நடைமுறைக்கு வரும் வகையில் மின் கட்டணத்தை அதிகரிப்பதற்கான அமைச்சரவை அறிவிப்பு அரசியலமைப்புக்கும், சட்டத்துக்கும் முரணானது.
கடந்த ஆகஸ்ட் மாதம் மின்கட்டண உயர்வுக்குப் பிறகு மின் உற்பத்திக்கான நிதிச் செலவுகள் மற்றும் பராமரிப்புச் செலவுகள் ஓரளவுக்கு ஈடுசெய்யப்பட்டுள்ளது.
எனவே, தற்போதைய 'செலவை பிரதிபலிக்கும்' 65 வீத கட்டண உயர்வை நியாயப்படுத்த
முடியாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

போர் நிறுத்தம் அறிவித்ததால் வெளியுறவு செயலாளர் குடும்பத்தை ட்ரோல் செய்யும் நெட்டிசன்கள் News Lankasri

இந்த தேதியில் பிறந்த பெண்கள் அதிர்ஷ்டசாலிகளாம்.. கணவருக்கு தான் லக்- எண்கணிதம் சொல்வது என்ன? Manithan
