ஜனாதிபதி பதவிக்காலத்தை நீட்டிக்க முயற்சியா? நாமல் விளக்கம்
தேர்தலை நடத்தாமல் ஜனாதிபதி அல்லது அரசாங்கத்தின் பதவிக் காலத்தை நீடிப்பதில் ஆளும் கட்சிக்கு விருப்பமில்லை என அமைச்சர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதிக்கு தனது பதவிக்காலத்தை நீடிக்கும் தீர்மானமில்லை. நாங்கள் உரிய நேரத்தில் தேர்தலை நடத்துவோம்.
பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் அரசியல் வரலாற்றில் தேர்தலை பிற்போடவோ அல்லது நீட்டிப்பதற்கு எதிர்பார்ப்புகள் இல்லை.
நாங்கள் அரசாங்கம் என்ற ரீதியில் அடுத்த 3 வருடங்களுக்கு மக்களுக்கான கடமைகளை நிறைவேற்றுவோம். எங்களுக்கு பதவி காலத்தை நீடிக்க எந்த அவசியமும் இல்லை என அமைச்சர் நாமல் ராஜபக்ஷ மேலும் தெரிவித்துள்ளார்.
கம்பஹா பிரதேசத்தில் ஊடகவியலாளர் ஒருவரின் கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இந்துமாகடல் அரசியலில் தமிழர் வகிபாகம் என்ன..! 2 நாட்கள் முன்
2007ஆம் ஆண்டு தீபாவளிக்கு வெளிவந்த அழகிய தமிழ் மகன், வேல், பொல்லாதவன் படங்கள்.. பாக்ஸ் ஆபிஸ் வசூல் எவ்வளவு தெரியுமா? Cineulagam