அமெரிக்க இடைக்காலத் தேர்தலுக்கு முன் ஈரான் மீது தாக்குதல் இல்லை : டொனால்ட் டிரம்ப் அறிவிப்பு
அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே பயனுள்ள பேச்சுவார்த்தைகள் இடம்பெற்று வருவதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இதற்கமைய, எதிர்வரும் நவம்பர் 3ஆம் திகதி நடைபெறவுள்ள அமெரிக்க இடைக்கால நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன் ஈரான் மீது மீண்டும் தாக்குதல் நடத்தப்பட மாட்டாது என்றும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார்.
அமெரிக்காவில் நவம்பர் 3ஆம் திகதி இடைக்காலத் தேர்தல் இடம்பெறவுள்ளது. அதுவரை ஈரான் மீது எந்தவித இராணுவத் தாக்குதலும் நடத்தப்படாது என ட்ரம்ப் தனது சமூக வலைத்தளப் பதிவில் உறுதி அளித்துள்ளார்.
நவம்பரில் இடைக்காலத் தேர்தல்
கட்டார் நாட்டின் மத்தியஸ்தத்துடன் அமெரிக்கா மற்றும் ஈரான் இடையிலான மறைமுகப் பேச்சுவார்த்தைகள் சாதகமான முறையில் முன்னேறி வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், ஈரானிய துறைமுகங்கள் மீதான அமெரிக்காவின் பொருளாதாரத் தடைகள் மற்றும் முற்றுகைகள் தொடர்ந்து நடைமுறையில் இருக்கும் என்றும் ட்ரம்ப் குறிப்பிட்டுள்ளார்.
ட்ரம்ப்பின் இந்த அறிவிப்பைத் தொடர்ந்து உலகச் சந்தையில் மசகு எண்ணெய் விலையில் காணப்பட்ட பதற்றம் சற்றே தணிந்துள்ளது.
பல்வேறு உடல்நலப் பாதிப்புக்களால் அவதியுறும் ஷிரந்தி! நாட்டுக்கு சேவை செய்தவர்களின் இன்றைய கதி - புலம்பும் தயாசிறி