தனியார் மயமாக்கப்படும் என்.எல்.டி தேசிய பண்ணை: மக்கள் வெளியிட்டுள்ள எதிர்ப்பு
அக்கரப்பத்தனை போபத்தலாவ NLD தேசிய பண்ணை தனியார் நிறுவனம் ஒன்றுக்கு குத்தகைக்கு வழங்கப்படவுள்ளதை எதிர்த்து ஹட்டனில் இன்று(10) ஆர்ப்பாட்டம் இடம்பெற்றுள்ளது.
அக்கரப்பத்தனை போபத்தலாவ NLD தேசிய பண்ணை இதுவரை காலம் அரசாங்கத்தின் கீழ் இயங்கி வந்துள்ளது.
தனியார் மயமாக்கப்படும் நிறுவனம்
தற்போது இந்த பண்ணையை 35 வருடம் குத்தகை அடிப்படையில் தனியார் நிறுவனம் ஒன்றுக்கு வழங்கப்படவுள்ளதால் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அங்கு வேலை செய்யும் 125 தமிழ் சிங்கள ஊழியர்கள் பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்றினை முன்னெடுத்துள்ளனர்.
பதாதைகள் ஏந்தியவாறு கோசங்கள் எழுப்பி பண்ணைக்கு முன்னால் சுமார் இரண்டு மணி நேரம் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் தாம் இதுவரை இந்த பண்ணையில் தொழில் செய்ததாகவும் இதுவரை லாபத்தோடு இயங்கியதாகவும் தெரிவித்துள்ளனர்.
மக்களின் கோரிக்கை
மேலும், இதனை தனியார் ஒருவருக்கு 35 வருடம் குத்தகை அடிப்படையில் வழங்க உள்ளதால் இதனை வழங்கக்கூடாது அரசாங்கமே இதனை நடத்த வேண்டும் என தெரிவித்துள்ளனர்.
தாம் பல்வேறு சிரமத்துக்கு மத்தியில் இந்த பண்ணையில் தொழில் செய்வதாகவும் வருமானத்தோடு இயங்கிய இதனை நஷ்டம் என கூறி விற்கப்படுவது அல்லது வேறு நபர்களுக்கு கொடுப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நல்ல தீர்வு ஒன்றினை எடுக்க
வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளனர்.



