அடுத்தடுத்து கைதாகும் படை அதிகாரிகள் ஈழப்போருடன் தொடர்புற்றவர்களா..!
முன்னாள் கடற்படை தளபதி நிஷாந்த உலகேதென்ன குற்றப்புலனாய்வு திணைக்களத்தினரால் நேற்றைய தினம் கைது செய்யப்பட்டார்.
இவ்வாறு தொடர்ச்சியாக கைது செய்யப்படும் பாதுகாப்பு துறையினர் சிலர், ஈழப்போரின் இறுதி தருவாயில் ஏதோ ஒரு சம்பவத்தில் தொடர்புபட்டிருப்பதாக சில தென்னிலங்கை சமூக ஊடகங்கள் மற்றும் தனி நபர்களால் பல கருத்துக்கள் மற்றும் வாதவிவாதங்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.
இதன் காரணமாக சிங்கள பேரினவாத மக்களிடத்தில் மேலும் ஒரு கலவரத்தை ஏற்படுத்தும் மனோ பாவம் உருவாக்கப்படுவதாக சமூக ஆர்வளர்கள் கருத்து கூறுகின்றனர்.
தொடர் கைதுகள்
முன்னாள் சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் பிரியந்த ஜயகொடி, தேசபந்து தென்னகோன், பாதுகாப்புச் செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ மற்றும் முன்னாள் பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜெயசுந்தர, குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் முன்னாள் பிரதிப் பொலிஸ் மா அதிபர் (ஓய்வு) ரொஹான் பிரேமரத்னவை என பட்டியல் நீல்கின்றது.
ஏற்கனவே அமைச்சர் பிமல் ரத்நாயக்க தமிழ் புலம்பெயர்ந்தோரின் மனதை திருப்திப்படுத்த போவதாகவும் வவுனியா விமானப்படை தளத்தை அகற்றப் போவதாவும் ஒரு கதையை பெருவாரியாக பரப்பி வருகின்றனர்.
நேற்று கம்மன்பில நடத்திய ஊடவியலாளர் மாநாட்டிலும் தமிழீழ விடுதலை புலிகளின் பிரதானிகளின் ஒருவரை ஜனாதிபதி சந்தித்ததாகவும் தெரிவித்தார்.
புலம்பெயர் இலங்கையர்கள்
அத்தோடு அமைச்சர் விஜித ஹேரத் இலங்கையில் முதலிடுவதற்காக புலம்பெயர் இலங்கையர்களுக்கு திறந்த அழைப்பு விடுத்துள்ளார்.
இவ்வாறான கதைகளின் தொடர்ச்சியும் பொலிஸார் மற்றும் முப்படைகளின் கைதுகளையும் தொடர்புபடுத்தி இனவாத அரசியல் வாதிகளின் விவாதங்கள், வெறுப்பு பேச்சுக்கள் சிறு கலவரங்கள் உருவாக்கப்பட்டு பெரும் பாதிப்பபை ஏற்படுத்தும் சூழலே சிறுக சிறுக விதைப்பதாக சமூக ஆர்வளர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
அரசாங்கத்திற்கு எதிரான கருத்துக்களும் வலுத்துவரும் நிலையில் இவ்வாறான குழப்பங்களை தனது அரசியல் தேவைகளுக்காக பாராமுகமாக இருப்பதற்கான சந்தர்ப்பங்கள் அதிகமாகும். எமது நாட்டின் வரலாற்றில் இது புதுமையான நிகழ்வுகளும் அல்ல எனவும் அவர்கள் குறிப்பிடுகின்றனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





தயவுசெய்து இந்த சீரியலை முடித்துவிடுங்கள், கதறும் சன் டிவி சீரியல் ரசிகர்கள்... அப்படி என்ன தொடர் Cineulagam

இந்தியக் கடற்படைக்கு ரூ.1 இலட்சம் கோடி மதிப்பில் 9 அதிநவீன நீர்மூழ்கி கப்பல்கள்., CCS ஒப்புதல் விரைவில் News Lankasri

தந்திரமாக வேலை செய்து காய் நகர்த்திய குணசேகரன், சந்தோஷத்தில் அறிவுக்கரசி... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
