நிருபமா ராஜபக்ச வழங்கிய விமான நிலைய 'பாஸ்' ஏற்படுத்தி சர்ச்சை! பதவி விலகிய தலைவர்
முன்னாள் அமைச்சர் நிருபமா ராஜபக்ச ஜப்பான் மாகாநாயக்க தேரர் ஒருவருக்கு வழங்கிய விமான நிலைய விசேட பாஸ் ஒன்றை புதுப்பிக்க தவறிய சிக்கலில் விமான நிலையங்கள் மற்றும் விமானப் போக்குவரத்து (இலங்கை) லிமிடெட்டின் தலைவர்,ஓய்வு பெற்ற விமானப்படை அதிகாரியான ஹர்ஷ அபேவிக்ரம நேற்று (28.01.2026) பதவி விலகியுள்ளார்.
ஏற்பட்டுள்ள சிக்கல்
முன்னாள் அமைச்சர் நிருபமா ராஜபக்ச இலங்கை பௌத்த பிக்குவும் ஜப்பான நாட்டின் இலங்கைக்கான சங்க நாயக்க ஒருவருக்கு வெளிநாடு செல்லும் போது எவ்வித பரிசோதனை நடவடிக்கையும் இல்லாமல் செல்வதற்கு அன்றைய அரசில் நிருபமா ராஜபக்சவால் வழங்கப்பட்ட பாஸ் தொடர்ந்து வந்த அரசாங்கங்களும் புதுப்பித்து கொடுத்துள்ளன.
அதை தொடர்ந்து குறித்த பாஸை புதுப்பிப்பதற்காக பௌத்த பிக்கு கடிதம் ஒன்றை துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் அநுர கருணாதிலக்கவுக்கு அனுப்பியுள்ளார்.

அமைச்சரும் இதை பார்த்த செய்து கொடுக்குமாறு விமான நிலையங்கள் மற்றும் விமானப் போக்குவரத்து (இலங்கை) லிமிடெட்டின் தலைவர்,ஓய்வு பெற்ற விமானப்படை அதிகாரியான ஹர்ஷ அபேவிக்ரமவுக்கு தெரியப்படுத்தியுள்ளார்.
ஆனால்,சர்வதேச விமான நிலையங்கள் ICAO பாதுகாப்பு பரிந்துரைகளை கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும் என்றும், எந்தவொரு மீறலும் அல்லது விலகலும் விமான நிலையத்தின் தரத்தை தரமிறக்க வழிவகுக்கும் என்றும், இது சர்வதேச நம்பிக்கை, செயல்பாடுகள் மற்றும் உறவுகளை பாதிக்கும் என்றும் கூறி, பாஸ் வழங்க அமைச்சர் விடுத்த கோரிக்கையை அவர் நிராகரித்ததாக கூறப்படுகிறது.

இந்த செயற்பாடுகளில் அமைச்சரின் வேண்டுகோளை தலைவர் செய்வில்லை என்ற சிக்கலும் மனதாக்கங்கள் ஏற்பட்ட நிலையில் அவர் பதவி விலகியதாக உள்ளக தகவல்களில் தெரியவந்துள்ளது.