நீதிமன்ற உத்தரவையும் மீறி செய்தி நிறுவனங்களுக்கு வெள்ளை மாளிகைக்குள் நுழைய தடை
பொலிடிகோ, சி.என்.என் (CNN) மற்றும் எம்.எஸ் நவ் ஆகிய செய்தி நிறுவனங்களின் ஊடகவியலாளர்கள் வெள்ளை மாளிகைக்குள் பிரவேசிப்பதற்கு விதிக்கப்பட்ட தடையை உடனடியாக நீக்குமாறு கூட்டாட்சி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ள போதிலும், செய்தியாளர்கள் வெள்ளை மாளிகைக்குள் அனுமதிக்கப்படாது தடுக்கப்பட்டுள்ளனர்.
ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பினால் விதிக்கப்பட்ட இந்த ஊடகத் தடையானது அரசியலமைப்பிற்கு முரணானது எனத் தெரிவித்த கூட்டாட்சி நீதியரசர் ஒருவர், தடையை இடைநிறுத்தி 14 நாட்களுக்கு ஊடகவியலாளர்களுக்கான அணுகலை மீண்டும் வழங்குமாறு இடைக்கால உத்தரவை பிறப்பித்திருந்தார்.
இருப்பினும், நீதிமன்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்ட சில மணித்தியாலங்களிலேயே பொலிடிகோ நிறுவன செய்தியாளரின் அடையாள அட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
தடை
அதேவேளை, தமது செய்தியாளரும் வெள்ளை மாளிகைக்குள் நுழைவதற்கு அனுமதிக்கப்படவில்லை என எம்.எஸ் நவ் நிறுவனமும் உறுதிப்படுத்தியுள்ளது.

நீதிமன்றத் தீர்ப்பின் பின்னர் சி.என்.என் நிறுவனத்தின் ஊடகவியலாளர்கள் உள்ளே அனுமதிக்கப்பட்டார்களா என்பது குறித்து உடனடியாகத் தெளிவான தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.
ஜனாதிபதி ட்ரம்ப் ஊடகங்களுக்கு எதிராக மேற்கொண்டு வரும் பிரதான நடவடிக்கைகளுக்கு மத்தியில், இந்த நீதிமன்ற உத்தரவு அவருக்கு ஏற்பட்ட பெரும் பின்னடைவாகப் பார்க்கப்படுகின்ற போதிலும், வெள்ளை மாளிகை நிர்வாகம் தொடர்ந்தும் ஊடகவியலாளர்களைத் தடுத்து நிறுத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
பிக்பாஸ் 10 வீட்டில் இருந்து அதிரடியாக வெளியேற்றப்பட்ட லட்சுமி ப்ரியா! அதிர்ச்சியிக் ரசிகர்கள் Manithan
சூப்பர் எல் நினோவால் கதிகலங்கப் போகும் அவுஸ்திரேலியா... நூற்றுக்கணக்கானோர் இறக்கக்கூடும் News Lankasri