நாளை மாலை 7 மணிக்கு தெரியும்..! நாடாளுமன்றில் பிரதமர் ஹரிணி அதிரடி

Parliament of Sri Lanka Harini Amarasuriya
By Shadhu Shanker Sep 24, 2026 01:46 PM GMT
Report

அரசாங்கத்தின் 158 நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஒற்றுமை குறித்து பல்வேறு கருத்துக்கள் முன்வைக்கப்பட்டு வரும் நிலையில், அவர்களின் ஒற்றுமை நாளை வெளிப்படும் என பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார்.

அரசியலமைப்பின் 22ஆவது திருத்தச் சட்டமூலம் தொடர்பான விவாதத்தில் இன்று (24) நாடாளுமன்றத்தில் உரையாற்றிய பிரதமர், அரசாங்கத்தின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தனிப்பட்ட நலன்களை அடிப்படையாகக் கொண்டல்லாமல், பொதுவான இலக்கை நோக்கி செயற்படுவதாகக் குறிப்பிட்டார்.

நாளை மாலை 7 மணி

“நாளை மாலை 7 மணியளவில் இந்த நாடாளுமன்றத்தின் நிலைமை என்ன என்பதை எங்களால் காண முடியும்.

அரசாங்கத்தின் 158 உறுப்பினர்களின் ஒற்றுமை எவ்வாறு உள்ளது என்பதும் நாளை வெளிப்படும்” என பிரதமர் தெரிவித்தார்.

நாளை மாலை 7 மணிக்கு தெரியும்..! நாடாளுமன்றில் பிரதமர் ஹரிணி அதிரடி | 7 Pm Tomorrow You Will See Unity Our 158 Mps Pm

158 நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஒற்றுமை தொடர்பில் பல்வேறு கருத்துக்கள் பரவி வருவதை ஏற்றுக்கொண்ட பிரதமர், எனினும் அவர்களுக்கிடையிலான ஒற்றுமை சிறிதளவும் பாதிக்கப்படவில்லை எனக் கூறினார்.

நாட்டில் தற்போது முன்னெடுக்கப்பட்டு வரும் மாற்றத்திற்கு இந்தக் கூட்டு ஒற்றுமை எவ்வாறு பங்களிக்கிறது என்பது நாளை மாலை தெளிவாகும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

இதனிடையே, இலங்கை ஒரு சிறந்த நாடாக மாறும் என்ற நம்பிக்கை மக்கள் மத்தியில் அதிகரித்து வருவதாகவும் பிரதமர் தெரிவித்தார்.

ஹரிணி அமரசூரிய

இதற்கு அண்மையில் இடம்பெற்ற தொடருந்து  ஊழியர்களின் வேலைநிறுத்தத்தை உதாரணமாகக் குறிப்பிட்ட அவர், வேலைநிறுத்தம் காரணமாக பயணச்சீட்டு பெற்றுக்கொள்ள முடியாத சில பயணிகள், அடுத்த நாள் இரண்டு பயணச்சீட்டுகளை வாங்கி முந்தைய பயணத்திற்கான கட்டணத்தையும் செலுத்திய சம்பவங்களை சுட்டிக்காட்டினார்.

நாளை மாலை 7 மணிக்கு தெரியும்..! நாடாளுமன்றில் பிரதமர் ஹரிணி அதிரடி | 7 Pm Tomorrow You Will See Unity Our 158 Mps Pm

“இது ஒரு சிறிய செயற்பாடாக இருக்கலாம். ஆனால், இந்த நாடு சிறந்ததாக மாற முடியும் என்ற நம்பிக்கையை அது வெளிப்படுத்துகிறது” என பிரதமர் கூறினார்.

சிறந்த பொதுச் சேவை, நேர்மையுடன் செயற்படும் தலைவர்கள், மக்களின் தேவைகளுக்கு பொறுப்புடன் பதிலளிக்கும் அரச நிறுவனங்கள் மற்றும் சுயாதீனமானதும் நியாயமானதுமான நீதித்துறை தொடர்பான எதிர்பார்ப்புகளும் மக்கள் மத்தியில் அதிகரித்து வருவதாக அவர் தெரிவித்தார்.

மக்கள் மத்தியில் வளர்ந்து வரும் இந்த நம்பிக்கையே நாட்டை மாற்றுவதற்கான அரசாங்கத்தின் முயற்சிகளுக்கு முக்கிய பலமாக அமைந்துள்ளதாக பிரதமர் ஹரிணி அமரசூரிய மேலும் குறிப்பிட்டார். 

நான் ஈழத் தமிழ் பெண்..! சமூகவலைத்தளங்களில் அதிர்வை ஏற்படுத்தியுள்ள மைத்ரேயி ராமகிருஷ்ணனின் ஒற்றைவார்த்தை

நான் ஈழத் தமிழ் பெண்..! சமூகவலைத்தளங்களில் அதிர்வை ஏற்படுத்தியுள்ள மைத்ரேயி ராமகிருஷ்ணனின் ஒற்றைவார்த்தை

நாமலுக்கு இலஞ்சம் வழங்கிய குற்றச்சாட்டு! ஜானகி சிறிவர்தனவுக்கு எதிராக நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு

நாமலுக்கு இலஞ்சம் வழங்கிய குற்றச்சாட்டு! ஜானகி சிறிவர்தனவுக்கு எதிராக நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு







YOU MAY LIKE THIS..







மரண அறிவித்தல்

வட்டக்கச்சி இராமநாதபுரம், Zürich, Switzerland, Brampton, Canada

22 Sep, 2026
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
மரண அறிவித்தல்

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, Villetaneuse, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

21 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் கிழக்கு, சுண்டுக்குழி

25 Sep, 2024
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வறுத்தலைவிளான், யாழ்ப்பாணம், கோண்டாவில், கொழும்பு, அநுராதபுரம்

25 Sep, 2022
9ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில், Oslo, Norway

24 Sep, 2022
நன்றி நவிலல்

மானிப்பாய், Villemomble, France

24 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, பிறிஸ்பேன், Australia

25 Sep, 2020
19ம் ஆண்டு நினைவஞ்சலி

இயக்கச்சி சங்கதார்வயல்

25 Sep, 2007
நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

Männedorf, Switzerland, Meilen, Switzerland

24 Sep, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நுணாவில் மேற்கு

24 Aug, 2026
3ஆம் ஆண்டு நினைவஞ்சலி

Seremban, Malaysia, பருத்தித்துறை, Middelfart, Denmark

25 Sep, 2023
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், மருதனார்மடம், Markham, Canada

13 Oct, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சிறுப்பிட்டி வடக்கு

21 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம், வட்டுக்கோட்டை

21 Sep, 2026
மரண அறிவித்தல்

Manippay, Blackpool, United Kingdom, Bremen, Germany

18 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சுதுமலை

25 Sep, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் மேற்கு, Neuilly, France

23 Sep, 2016
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, நல்லூர் வடக்கு, Bolton, Canada

20 Sep, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், பிரான்ஸ், France

22 Sep, 2017
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US