நியூயோர்க் எல்லைக்குள் நுழைந்தால் நெதன்யாகுவுக்கு கைது..! ஜோஹ்ரான் மம்தானி அதிரடி
ஐக்கிய நாடுகள் பொதுச்சபை கூட்டத்தில் உரையாற்றுவதற்காக நியூயோர்க் சென்றுள்ள இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, நியூயோர்க் மேயர் ஜோஹ்ரான் மம்தானியை மிகக் கடுமையாக விமர்சிப்பார் என எதிர்ப்பார்ப்பு வெளியிடப்பட்டுள்ளது.
ஐந்து வாரங்களில் இஸ்ரேலில் பொதுத்தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், நெதன்யாகுவின் இந்த விஜயம் அவருடைய தேர்தல் பிரசாரத்தின் ஒரு பகுதியாகவே பார்க்கப்படுகின்றது.
நியூயோர்க் மேயரைக் கடுமையாகச் சாடி வீடியோ செய்தி ஒன்றை வெளியிட்ட நெதன்யாகு, "எங்களது வீரர்களின் உண்மை நிலையை உலகிற்கு உரக்கச் சொல்லவும், உங்கள் உண்மையான முகத்தை அம்பலப்படுத்தவுமே நான் நியூயோர்க் வருகிறேன்" எனத் தெரிவித்துள்ளார்.
அத்துடன் மேயர் மம்தானி ஹமாஸ் அமைப்பினருக்கு ஆதரவளிப்பதாக உண்மைக்குப் புறம்பான குற்றச்சாட்டையும் அவர் சுமத்தியுள்ளார்.
நெதன்யாகுவை கைது செய்யும் நடவடிக்கை
இதனிடையே, போர் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளாகியுள்ள நெதன்யாகுவை நியூயோர்க் எல்லைக்குள் கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என மேயர் மம்தானி முன்னர் பிரச்சாரம் செய்திருந்தார்.

பின்னர் அதற்குத் தமக்கு சட்டப்பூர்வ அதிகாரம் இல்லை என தெளிவுபடுத்தியிருந்த போதிலும், பாலஸ்தீனியர்களுக்கு எதிரான கொடூரமான இன அழிப்பின் பிரதான சூத்திரதாரி நெதன்யாகுவே என இந்த வாரத்தில் மீண்டும் சாடியிருந்தார்.
இஸ்ரேலில் வரும் அக்டோபர் 27 ஆம் திகதி பொதுத்தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், தற்போதைய கருத்துக்கணிப்புகள் நெதன்யாகுவுக்குப் பின்னடைவு ஏற்பட்டுள்ளதையே காட்டுகின்றன.
காசா போர் தொடர்பான உலகளாவிய விமர்சனங்கள் மற்றும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பை சந்திப்பதற்கான வாய்ப்புகள் இல்லாத நிலை போன்றவை நெதன்யாகுவுக்கு மேலும் அரசியல் அழுத்தத்தை ஏற்படுத்தியுள்ளன.
இதனால், ஐக்கிய நாடுகள் சபையில் அவர் ஆற்றவுள்ள உரை உலக நாடுகளுக்கான செய்தி என்பதை விட, இஸ்ரேலிய வாக்காளர்களைத் தன் பக்கம் ஈர்ப்பதற்கான ஒரு பிரசாரப் பேச்சாகவே அமையும் என அரசியல் ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
நாமலுக்கு இலஞ்சம் வழங்கிய குற்றச்சாட்டு! ஜானகி சிறிவர்தனவுக்கு எதிராக நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு
சூப்பர் எல் நினோவால் கதிகலங்கப் போகும் அவுஸ்திரேலியா... நூற்றுக்கணக்கானோர் இறக்கக்கூடும் News Lankasri
சரவணன் பற்றி அஞ்சலிக்கு தெரிய வந்த உண்மை, இனி நடக்கப்போவது என்ன?... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் புரொமோ Cineulagam