மரணித்த புலிப் பயங்கரவாதி திலீபனை நினைவுகூர்ந்தவர்களை கைது செய்க! விமல் கொடுக்கும் அழுத்தம்
இலங்கையில் நாளுக்கு நாள் புதுப்புது மாற்றங்கள் நிகழ்ந்து வருகின்றன. சமூக, அரசியல் மற்றும் பொருளாதார ரீதியிலான நகர்வுகள், சர்வதேசம் திரும்பிப் பார்க்கும் வகையிலான அரசியல் மாற்றங்களும் அரங்கேறி வருகின்றன.
இந்த நிலையில், இன்று எமது தளத்தில் அதிகளவான செய்திகளை நாங்கள் பிரசுரித்திருந்தோம். அவற்றுள் நீங்கள் தவறவிட்ட முக்கிய செய்திகளை விசேட தொகுப்பாக உங்களுக்கு தருகின்றோம். நீங்கள் தவறவிட்ட செய்திகளை கட்டாயம் படிக்கவும்.
1 திருக்கோணேஸ்வரம் உலகெங்கும் வாழும் 120 கோடி இந்துக்களின் வழிபாட்டிடம் என்றும், அதனை ஆக்கிரமிப்பதை நிறுத்துமாறும் தமிழ்நாடு இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் தெரிவித்துள்ளார். ஆலய ஆக்கிரமிப்பு தொடர்பில் வெளியிடப்பட்ட அறிக்கை ஒன்றிலே இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
திருக்கோணேஸ்வர ஆலய ஆக்கிரமிப்பு தொடர்பில் தமிழ்நாடு இந்து மக்கள் கட்சியின் தலைவர் ஆதங்கம் >>> மேலும்படிக்க
2 மரணித்த புலிப் பயங்கரவாதியான திலீபனை வடக்கு, கிழக்கில் பகிரங்கமாக நினைவேந்தியவர்களை உடனடியாகச் கைதுசெய்து சிறையில் அடைக்க வேண்டும் என அரசிடம் வலியுறுத்தியுள்ளார் முன்னாள் அமைச்சரும் நாடாளுமன்ற உறுப்பினருமான விமல் வீரவன்ச.
திலீபனை நினைவேந்தியோரை உடனே சிறைக்குள் தள்ளுங்கள்! - விமல் ஆவேசம் >>> மேலும்படிக்க
3 வரலாறு காணாத விலை உயர்வை அடைந்திருந்த தங்கத்தின் விலை தற்போது படிப்படியாக குறைவடைந்து வருகின்றது.
நாளுக்கு நாள் தொடர் வீழ்ச்சியில் தங்க விலை
>>> மேலும்படிக்க
4 நாடளாவிய ரீதியில் உள்ள 5000இற்கும் மேற்பட்ட அப்பம் தயாரிப்பாளர்கள் வேலை இல்லாமல் திண்டாடுவதாக தெரிவிக்கப்படுகின்றது.
அப்பம் என்பதை நினைத்துக் கூட பார்க்க முடியாத நிலையில் இலங்கையர்கள் >>> மேலும்படிக்க
5 கொழும்பில் பாடசாலை மாணவன் மீது கும்பல் ஒன்று கொடூரமான முறையில் தாக்குதல் மேற்கொண்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கொழும்பில் அமைச்சர் ஒருவரின் மகன் அட்டகாசம் >>> மேலும்படிக்க
6 நகர அபிவிருத்தி அதிகார சபைக்கு சொந்தமான வீடுகளை டொலர்களுக்கு விற்பனை செய்யும் அரசாங்க வேலைத்திட்டத்தின் கீழ் முதலாவது வீடு விற்பனை செய்யப்பட்டுள்ளது.
வெளிநாட்டில் பணியாற்றும் இலங்கையர்களுக்கான வீடு விற்பனை ஆரம்பம் >>> மேலும்படிக்க
7 பொது மக்களுக்கு எதிரான அடக்குமுறைகள் கடுமையாக்கப்பட்டால், வெகு விரைவில் இலட்சக்கணக்கான மக்கள் அலையுடன் கொழும்பை சுற்றிவளைத்து ஜனாதிபதியை சிறைப்பிடிப்போம் என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.மரிக்கார் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இலட்சக்கணக்கான மக்களுடன் கொழும்பை சுற்றிவளைத்து ஜனாதிபதியை சிறைப்பிடிப்பதாக பகிரங்க எச்சரிக்கை >>> மேலும்படிக்க
8 யாழில் கடந்த 26ஆம் திகதி முன்னெடுக்கப்பட்ட தியாக தீபம் திலீபனின் நினைவேந்தல் நிகழ்வு சர்ச்சைகளை ஏற்படுத்தியிருந்தது.
அவமதிக்கப்பட்ட சமயத் தலைவர்! யாழில் பலரையும் முகம் சுழிக்க வைத்த சம்பவம் >>> மேலும்படிக்க
9 பெட்ரோல், டீசல் மற்றும் மண்ணெண்ணெய் ஆகியனவற்றின் விலைகளை லீட்டர் ஒன்றுக்கு 100 ரூபாவினால் குறைக்க முடியும் என எரிபொருள், மின்சாரம் மற்றும் துறைமுக கூட்டு தொழிற்சங்கங்களின் அழைப்பாளர் ஆனந்த பாலித தெரிவித்துள்ளார்.
எரிபொருட்களின் விலைகளை லீட்டர் ஒன்றுக்கு 100 ரூபாவினால் குறைக்க முடியும் என தகவல் >>> மேலும்படிக்க
10 கொழும்பில் அடாவடித்தனம் செய்த அமைச்சர் பிரசன்ன ரணவீரவின் மகன் உள்ளிட்ட 5 பேர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கொழும்பில் பிரபல அமைச்சரின் மகன் உட்பட பலர் அதிரடியாக கைது
>>> மேலும்படிக்க