கொழும்பில் அமைச்சர் ஒருவரின் மகன் அட்டகாசம்
கொழும்பில் பாடசாலை மாணவன் மீது கும்பல் ஒன்று கொடூரமான முறையில் தாக்குதல் மேற்கொண்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கிரிபத்கொடையில் உள்ள பிரபல பயிற்சி வகுப்புக்கு வந்த மாணவன் மீது நேற்று முன்தினம் இரவு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அமைச்சரின் மகன்

டிஃபெண்டர் வாகனங்களில் வந்து தன்னை அமைச்சரின் மகன் என கூறிக்கொண்ட இளைஞன் உள்ளிட்ட குழுவினர் இந்தத் தாக்குதல் நடத்தியுள்ளனர் .
சுமார் 20 பேர் கொண்ட கும்பல் குறித்த மாணவனை இரத்தம் வரும் வரை தாக்கியதாக சம்பவத்தை நேரில் கண்ட மக்கள் தெரிவித்துள்ளனர்.
தாக்குதல் நடத்தியவர்களைத் தவிர, கருப்பு உடை அணிந்த உயரடுக்கு பாதுகாவலர்கள் குழு டிஃபெண்டர் வாகனங்களில் வந்து அருகில் இருந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது .
காதலிக்கு கடிதம்

குறித்த மாணவன் அமைச்சரின் மகன் என கூறிக்கொண்ட இளைஞனின் காதலிக்கு காதல் கடிதம் கொடுத்துள்ளதாகவும் இதன் காரணமாகவே இத்தாக்குதல் நடத்தப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
தாக்குதல் நடத்தப்பட்ட பகுதிக்கு அருகாமையில் பொலிஸ் நிலையம் இருந்த போதும், பொலிஸார் அதனை கண்டுகொள்ளவில்லை என குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
கில்லியை ஓரங்கட்டி முதல் நாள் ரீ-ரிலீஸ் வசூலில் மாஸ் காட்டிய ரஜினியின் படையப்பா... தெறிக்கும் வசூல் Cineulagam