அப்பம் என்பதை நினைத்துக் கூட பார்க்க முடியாத நிலையில் இலங்கையர்கள்
நாடளாவிய ரீதியில் உள்ள 5000இற்கும் மேற்பட்ட அப்பம் தயாரிப்பாளர்கள் வேலை இல்லாமல் திண்டாடுவதாக தெரிவிக்கப்படுகின்றது.
அப்பம் கொள்வனவு செய்வோரின் எண்ணிக்கையில் மிகப்பெரிய வீழ்ச்சி பதிவாகியுள்ளதன் காரணமாக இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் அசேல சம்பத் தெரிவித்துள்ளார்.
நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
50 வீதத்தால் குறைவு
நாடளாவிய ரீதியில் அப்பம் மற்றும் முட்டை அப்பம் நுகர்வோர்கள் 50 வீதத்தால் குறைந்துள்ளனர்.
தற்போதைய பொருளாதார நிலையைக் கருத்தில் கொண்டு, நுகர்வோர் அப்பங்களை வாங்குவதைக் தவிர்த்துள்ளனர்.
நாடளாவிய ரீதியில் 5000இற்கும் மேற்பட்ட அப்பம் தயாரிப்பாளர்கள் வேலை இல்லாமல் திண்டாடுவதாக அவர் கூறியுள்ளார்.
எனினும் தற்போதைய சூழ்நிலையில் அப்பம் என்பதையே நுகர்வோர் நினைத்துக்கூட பார்க்க முடியாத சூழ்நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளதாக அசேல சம்பத் மேலும் தெரிவித்தார்.
you may like this video