இலங்கை அரசாங்கத்தின் நடவடிக்கையால் நேர்ந்த நிலை! இழக்கப்பட்ட மில்லியன் கணக்கான டொலர்கள்
இலங்கையில் நாளுக்கு நாள் புதுப் புது மாற்றங்கள் நிகழ்ந்து வருகின்றன. சமூக, அரசியல் மற்றும் பொருளாதார ரீதியிலான நகர்வுகள், சர்வதேசம் திரும்பிப் பார்க்கும் வகையிலான அரசியல் மாற்றங்களும் அரங்கேறி வருகின்றன. இந்த நிலையில் இன்று எமது தளத்தில் அதிகளவான செய்திகளை நாங்கள் பிரசுரித்திருந்தோம்.
அவற்றுள் நீங்கள் தவறவிட்ட முக்கிய செய்திகளை விசேட தொகுப்பாக உங்களுக்கு தருகின்றோம். நீங்கள் தவறவிட்ட செய்திகளை கட்டாயம் படிக்கவும்.
1 பெரும் சர்ச்சைகளுக்கு மத்தியில் சீன ஆராய்ச்சிக் கப்பலான யுவான் வாங் 5 ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை வந்தடைந்துள்ளது. யுவான் வாங் 5 சீன கப்பல் இலங்கை வருவது தொடர்பில் பலத்த சர்ச்சைகள் எழுப்பப்பட்டிருந்தன.
மேலும் படிக்க >>> சர்ச்சைகளுக்கு மத்தியில் ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை அடைந்தது யுவான் வாங்
2 இலங்கையை வந்தடைந்துள்ள சீனாவின் யுவான் வாங் - 5 கப்பலின் கப்டன் இலங்கை பிரதிநிதிகளை அவமதித்ததாக கருத்துக்கள் வெளியாகியுள்ளன.
மேலும் படிக்க >>> சர்ச்சைக்குரிய யுவான் வாங் கப்பலை வரவேற்கச் சென்ற முன்னாள் அமைச்சர் சரத் வீரசேகர உள்ளிட்டவர்களுக்கு நேர்ந்த நிலை
3 அத்தியாவசிய பொருட்களில் ஒன்றான அரிசியின் விலையானது இன்று முதல் குறைக்கப்படவுள்ளதாக தெரியவருகிறது.
மேலும் படிக்க >>> அத்தியாவசிய பொருளொன்றின் விலை இன்று முதல் குறைப்பு! வெளியானது தகவல்
4 கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலைய விரிவாக்கத் திட்டத்தை நிறுத்த மற்றுமொரு ஜப்பானிய நிறுவனம் நடவடிக்கை எடுத்துள்ளது.
மேலும் படிக்க >>> கட்டுநாயக்க விமான நிலையத்தில் நிறுத்தப்படும் மற்றுமொரு பணி
5 இலங்கைக்கு எப்போதும் கப்பல்களால்தான் பிரச்சினை. மனிதகுல விரோதிகளான விஜயனும், அவனது எழுநூறு தோழர்களும் லாடா தேசத்தில் கப்பலேறி இலங்கைத் தீவை அடைந்திராவிட்டால் இந்நாடு ரத்தக்களரிகளைக் கண்டிராது.
மேலும் படிக்க >>> கப்பல்களால் சிக்கிய இலங்கை! இறையாண்மையை இழந்துவிட்ட சிங்கள தேசம்
6 சீன கப்பலுக்கு இலங்கைக்குள் பிரவேசிக்க இடமளித்தமை சம்பந்தமாக மிகப் பெரிய ராஜதந்திர சிக்கலை எதிர்நோக்க நேரிடும் என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹர்ச டி சில்வா தெரிவித்துள்ளார்.
மேலும் படிக்க >>> புலம்பெயர்ந்தவர்கள் என்றால் தமிழர்கள் மாத்திரமா..!
7 இலங்கையில் காய்ச்சல் இருப்பவர்களுக்கு அவசர அறிவுறுத்தலொன்று வழங்கப்பட்டுள்ளது. நாட்டில் தற்போது கோவிட் தொற்று பரவல் அதிகரித்து வருவதாக சுகாதார தரப்பின் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும் படிக்க >>> இலங்கையில் காய்ச்சல் இருப்பவர்களுக்கு அவசர அறிவுறுத்தல்
8 விலைச்சூத்திரத்தின்படி, எரிபொருளின் விலையில் எந்த மாற்றத்தையும் செய்யாமல் இருப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. எப்படியிருப்பினும் எரிபொருள் விலை ஒவ்வொரு மாதமும் முதலாம் திகதி மற்றும் 15 ஆம் திகதிகளில் திருத்தப்படும் என மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
மேலும் படிக்க >>> எரிபொருள் விலை மாற்றம் தொடர்பில் வெளியான தகவல்
9 2014 முதல் 2021 வரையிலான காலப் பகுதியில் ஆறு சர்வதேச தமிழ் அமைப்புகள் மற்றும் 317 தனி நபர்களுக்கு இலங்கை அரசாங்கங்களால் விதிக்கப்பட்டிருந்த தடை காரணமாக இலங்கை வருடாந்தம் 300 மில்லியன் முதல் 500 மில்லியன் டொலர்களுக்கு மேல் இழந்துள்ளதாக உலக தமிழர் பேரவையின் பேச்சாளர் சுரேன் சுரேந்திரன் தெரிவித்துள்ளார்.
மேலும் படிக்க >>> இலங்கை அரசாங்கம் விதித்த தடை! மில்லியன்கணக்கான டொலர்கள் இழப்பு
10 நாடாளுமன்ற உறுப்பினர் சிவநேசதுரை சந்திரகாந்தனின் (பிள்ளையான்) அலுவலகத்தின் கூரையில் இரண்டு கைக்குண்டுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலும் படிக்க >>> பிள்ளையானின் அலுவலகத்தில் கைக்குண்டுகள் மீட்பு