சர்ச்சைகளுக்கு மத்தியில் ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை அடைந்தது யுவான் வாங் 5 (Video)
பெரும் சர்ச்சைகளுக்கு மத்தியில் சீன ஆராய்ச்சிக் கப்பலான யுவான் வாங் 5 ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை வந்தடைந்துள்ளது.
யுவான் வாங் 5 சீன கப்பல் இலங்கை வருவது தொடர்பில் பலத்த சர்ச்சைகள் எழுப்பப்பட்டிருந்தன.
குறிப்பாக இந்தியாவின் தேசிய பாதுகாப்பை காரணம் காட்டி இந்த சர்ச்சைகள் எழுந்திருந்த நிலையில் இந்த விவகாரம் குறித்து மேலும் ஆலோசனைகள் நடத்தப்படும் வரை பயணத்தை ஒத்திவைக்குமாறு இலங்கை சீனாவிடம் கோரிக்கை விடுத்திருந்தது.
வட்டமிடும் யுத்த - உளவு கப்பல்கள்! இலங்கையை கதிகலங்கச் செய்துள்ள சீனா |
இந்த நிலையில், கடந்த 11ஆம் திகதி ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை வந்தடையவிருந்த குறித்த கப்பலின் வருகை தாமதமானது.
இவ்வாறான சூழ்நிலையில் குறித்த கப்பல் ஹம்பாந்தோட்டைக்கு வருவதற்கு இலங்கையின் வெளிவிவகார அமைச்சு கடந்த 13ஆம் திகதி அனுமதி வழங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியிருந்தன.
எனினும் தேவையான எரிபொருளை பெற்றுக் கொள்வதற்காக குறித்த கப்பல் நாட்டிற்கு பிரவேசித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.














அய்யனார் துணை, சிறகடிக்க ஆசை, சின்ன மருமகள் ஒன்று சேர்ந்த 3 சீரியல் நாயகிகள்.. என்ன விஷயம், வீடியோவுடன் இதோ Cineulagam

ரோஹினி, க்ரிஷ் மாற்றி மாற்றி சொன்ன விஷயம், சந்தேகத்தில் முத்து-மீனா, அப்படி என்ன நடந்தது... சிறகடிக்க ஆசை சீரியல் Cineulagam

சீனா, ரஷ்யாவை பின்னுக்கு தள்ளி... துருக்கி உருவாக்கும் கொடிய ஆயுதம்: இந்தியாவிற்கு கெட்ட செய்தி News Lankasri
