சர்ச்சைக்குரிய யுவான் வாங் கப்பலை வரவேற்கச் சென்ற முன்னாள் அமைச்சர் சரத் வீரசேகர உள்ளிட்டவர்களுக்கு நேர்ந்த நிலை
இலங்கையை வந்தடைந்துள்ள சீனாவின் யுவான் வாங் - 5 கப்பலின் கப்டன் இலங்கை பிரதிநிதிகளை அவமதித்ததாக கருத்துக்கள் வெளியாகியுள்ளன.
கடந்த நாட்களில் சர்ச்சைக்குரிய விடயமாக பரவலாக பேசப்பட்ட இந்த கப்பல் இன்று இலங்கையின் அம்பாந்தோட்டை துறைமுகத்தை வந்தடைந்தது.
கப்பலை வரவேற்பதற்கென்று முன்னாள் பொதுப் பாதுகாப்பு அமைச்சர் ரியர் அட்மிரல் சரத் வீரசேகர உள்ளிட்ட குழுவினர் சென்றிருந்தனர்.
இதன்போது, அவரும் அவருடன் சென்ற குழுவினரும் அவமதிக்கப்பட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
இலங்கை பிரதிநிதிகள் அவமதிக்கப்பட்டனரா..

சரத் வீரசேகர, சீன கப்பலின் கப்டனுக்கு கைலாகு கொடுக்க முயன்றுள்ளார், எனினும் சீன கப்பலின் கப்டன் அதனை மறுத்து கையை உயர்த்தி காட்டும் வகையிலான புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றன.
அத்துடன், கப்பலை வரவேற்கச் சென்ற நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச உள்ளிட்ட குழுவினர் கப்பலுக்குள் செல்வதற்கு அனுமதி கோரியுள்ளனர்.
எனினும், அவர்கள் உட்செல்ல முடியாதென அனுமதி மறுக்கப்பட்டுள்ளது எனவும் தகவல் வெளியாகியுள்ளது.
பல்வேறு சர்ச்சைகளுக்கு மத்தியில் இலங்கையை வந்தடைந்த இந்தக்கப்பல் எதிர்வரும் 22ஆம் திகதி வரை அம்பாந்தோட்டை துறைமுகத்தில் நங்கூரமிடப்பட உள்ளது.


                                            
                                                                                                                                    
    
    
    
    
    
    
    
    
    
    Bigg Boss: ரெட் கார்டு பெற்றும் வெளியேற மறுத்த போட்டியாளர்... மண்டியிட்டு மன்னிப்பு கேட்ட தருணம் Manithan
    
    அந்த நாட்டு அகதிகள் வலுக்கட்டாயமாக வெளியேற்றப்படுவார்கள்... ஜேர்மன் சேன்சலர் திட்டவட்டம் News Lankasri
    
    ஜனனியிடம் வீடியோ இல்லாத விஷயத்தை தெரிந்துகொண்ட கரிகாலன், பரபரப்பான எபிசோட்... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam