கட்டுநாயக்க விமான நிலையத்தில் நிறுத்தப்படும் மற்றுமொரு பணி
கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலைய விரிவாக்கத் திட்டத்தை நிறுத்த மற்றுமொரு ஜப்பானிய நிறுவனம் நடவடிக்கை எடுத்துள்ளது.
ஏற்கனவே ஜெய்க்கா நிறுவனம் தனது திட்டங்களை நிறுத்தியுள்ள நிலையில், Taisei நிறுவனமும் பணிகளை நிறுத்த தீர்மானித்துள்ளது.
இது தொடர்பில் இலங்கை அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த ஜப்பானின் Taisei நிறுவனம் தீர்மானித்துள்ளது.
நிதி இடைநிறுத்தம்

குறித்த திட்டத்துக்கான நிதியுதவியை இடைநிறுத்தியமையை அடுத்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
விமான நிலையத்தில் புதிய பல்நோக்கு முனையம் மற்றும் வீதியை அமைப்பதற்கான ஒப்பந்தத்தை நிறுவனம் 2020 இல் பெற்றுள்ளது,
அபிவிருத்தி பணி தாமதம்
அது அடுத்த ஆண்டுக்குள் முடிக்கப்பட வேண்டும்.
அதன்படி, நிதி நிலைமை நன்றாக இல்லை என்றால், ஜப்பானிய நிறுவனம் சம்பந்தப்பட்ட திட்டத்திலிருந்து விலக்குக் கோரும் திறன் உள்ளது.
சேது-ஐஸ்வர்யா நிச்சயதார்த்தத்தில் நடந்த பரபரப்பு சம்பவம், தமிழ் செய்யப்போவது என்ன?- சின்ன மருமகள் சீரியல் Cineulagam
Super Singer Junior: ஒட்டுமொத்த அரங்கத்தையே அழ வைத்த பார்வையற்ற சிறுவன்... புல்லரிக்க வைத்த குரல் Manithan