முதல் உரையிலேயே ட்ரம்பை எச்சரித்த நியூயோர்க் மேயர்.. அமெரிக்காவில் அரசியல் பதற்றம்!
நியூயோர்க் நகரத்திற்கு தீங்கு விளைவிக்க ஜனாதிபதி முடிவு செய்தால், அவரை எதிர்த்து நிற்கத் தயாராக இருப்பதாக நகரின் புதிய மேயர் ஜோஹ்ரான் மம்தானி தெரிவித்துள்ளார்.
நியூயோர்க் நகரத்தின் வரலாற்றில், முதல் முஸ்லிம் மேயராக ஸோஹ்ரான் மாம்டானி தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
இந்நிலையில், அவர் மேயராக தேர்ந்தெடுக்கப்பட்ட பின்னர் ஆற்றிய முதல் உரையில்,
“அமெரிக்காவின் அதிக வாழ்க்கை செலவை கொண்ட நகரமாக நியூயோர்க் உள்ளது. எனது வெற்றி நியூயோர்க் நகரத்தின் வாழ்க்கை செலவுகளை குறைப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
ட்ரம்பின் எச்சரிக்கை
நியூயோர்க்கில் வசதி படைத்த முதல் 1 சதவீதமானோருக்கு வரியை உயர்த்த வேண்டும். ஆண்டுக்கு 1 மில்லியன் டொலர்களுக்கு மேல் சம்பாதிப்போருக்கு 2% நிலையான வரியை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளோம்.

குழந்தை பராமரிப்புக்கான அதிக செலவு காரணமாக தொழிலாளர்கள் ஏற்கனவே நகரத்திலிருந்து வெளியேறுகின்றனர். இதனால் வணிகங்கள், திறமையான தொழிலாளர்களை தக்கவைத்துக்கொள்ள சிரமப்படுகின்றன.
இதேவேளை, மம்தானி வெற்றி பெற்றால் நகரத்திற்கான கூட்டாட்சி நிதியைக் குறைப்பதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அச்சுறுத்தினார்.

நியூயோர்க் நகரத்திற்கு தீங்கு விளைவிக்க ஜனாதிபதி முடிவு செய்தால், அவரை எதிர்த்து நிற்கத் தயாராக உள்ளேன்” எனத் தெரிவித்துள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
முத்துவிடமே நேரடியாக சிக்கப்போகும் ரோஹினி, எப்படி தெரியுமா?.. சிறகடிக்க ஆசை சீரியல் எபிசோட் Cineulagam
19 நாள் முடிவில் துருவ் விக்ரமின் பைசன் காளமாடன் படம் செய்துள்ள மொத்த வசூல்... எவ்வளவு தெரியுமா? Cineulagam
ட்ரம்ப் - சவுதி மெகா ஒப்பந்தம்... தூக்கம் தொலைத்த இஸ்ரேல்: ஆபத்தான போர் விமானங்கள் விற்பனை News Lankasri
அன்புக்கரசிற்கு பார்கவி கொடுத்த தரமான பதிலடி, கரிகாலனின் கிரிமினல் பிளான்... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam