நியூயோர்க் நகரத்திற்கு முதன் முறையாக முஸ்லிம் மேயர் தெரிவு
நியூயோர்க் நகரத்தின் வரலாற்றில், முதல் முஸ்லிம் மேயராக ஸோஹ்ரான் மாம்டானி தெரிவு செய்யப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இவர் நியூயோர்க் நகரத்தின் முதல் முஸ்லிம் மேயர் மட்டுமன்றி, மிக இளம் வயதுடைய மேயர்களில் ஒருவராகவும், தெற்காசிய வம்சாவளியைச் சேர்ந்த முதல் தலைவர் என்ற பெருமையையும் பெற்றுள்ளார்.
வரலாற்று வெற்றி
ஸோஹ்ரான் மாம்டானி ஒரு ஜனநாயக சோசலிச வேட்பாளர் ஆவார். இவர் உகண்டாவில் பிறந்தவர். இவரது பெற்றோர் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர்கள்.

நியூயோர்க் நகரின் வாழ்க்கைச் செலவு மற்றும் மலிவுத் திறன் போன்ற முக்கிய பிரச்சினைகளை மையமாகக் கொண்டு இவரது பிரசாரம் அமைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
இவர் ஜனநாயகக் கட்சியின் சார்பில் போட்டியிட்டு, முன்னாள் ஆளுநரும் சுயேட்சையாகப் போட்டியிட்டவருமான எண்ட்ரூ கியூமோ, மற்றும் குடியரசுக் கட்சி வேட்பாளர் கர்ட்டிஸ் ஸ்லிவா ஆகியோரைத் தோற்கடித்து இந்த வரலாற்று வெற்றியைப் பெற்றுள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
அன்புக்கரசிற்கு பார்கவி கொடுத்த தரமான பதிலடி, கரிகாலனின் கிரிமினல் பிளான்... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
ட்ரம்ப் - சவுதி மெகா ஒப்பந்தம்... தூக்கம் தொலைத்த இஸ்ரேல்: ஆபத்தான போர் விமானங்கள் விற்பனை News Lankasri
முத்துவிடமே நேரடியாக சிக்கப்போகும் ரோஹினி, எப்படி தெரியுமா?.. சிறகடிக்க ஆசை சீரியல் எபிசோட் Cineulagam