அடுத்த 36 மணி நேரத்தில் வானிலையில் மாற்றம்! பொதுமக்களுக்கு முக்கிய அறிவுறுத்தல்
அடுத்த 36 மணித்தியாலங்களுக்குச் செல்லுபடியாகும் வகையில் வானிலை மாற்றம் குறித்து வளிமண்டலவியல் திணைக்களம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
இதன்படி, அடுத்த 36 மணி நேரத்தில் கிழக்கு, ஊவா மற்றும் மத்திய மாகாணங்களிலும், பொலன்னறுவை மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யக்கூடும் என்று தெரிவித்துள்ளது.
இன்று (05) மாலை 4 மணிக்கு வெளியிடப்பட்ட வானிலை அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்
ஊவா மாகாணத்திலும், மட்டக்களப்பு, அம்பாறை, ஹம்பாந்தோட்டை, மாத்தளை மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் சில இடங்களில் 50 மி.மீட்டருக்கும் அதிகமான மழை பெய்யக்கூடும் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வடக்கு மாகாணத்திலும் அனுராதபுரம் மாவட்டத்திலும் பலத்த மழை பெய்யக்கூடும். ஏனைய பகுதிகளில், பிற்பகல் 2.00 மணிக்குப் பிறகு சில இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.
இரத்தினபுரி, களுத்துறை, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களில் சில இடங்களில் 50 மி.மீட்டருக்கும் அதிகமான மழை பெய்யக்கூடும் என்றும் கூறப்பட்டுள்ளது.
தேவையான பாதுகாப்பு நடவடிக்கை
வடக்கு மற்றும் வடமேற்கு மாகாணங்களிலும் மாத்தளை, திருகோணமலை மற்றும் அனுராதபுரம் மாவட்டங்களிலும் அவ்வப்போது மணிக்கு 30-40 கி.மீ வேகத்தில் மிதமான பலத்த காற்று வீசக்கூடும்.

மேற்கு, சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களிலும், காலி, மாத்தறை மற்றும் பதுளை மாவட்டங்களிலும் காலை நேரங்களில் சில இடங்களில் மூடுபனி நிலவக்கூடும்.
இடியுடன் கூடிய மழையுடன் கூடிய தற்காலிக பலத்த காற்று மற்றும் மின்னல் அபாயங்களைக் குறைப்பதற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம் பொதுமக்களை கேட்டுக்கொள்கின்றது.