ட்ரம்ப் விடுத்த அச்சுறுத்தல்.. அமெரிக்கா எதிர்பாரா வரலாற்று வெற்றியால் சூடுபிடிக்கும் அரசியல் களம்!
1892ஆம் ஆண்டுக்குப் பிறகு நியூயோர்க் நகரத்தின் இளம் மேயராகவும், முதல் முஸ்லிம் மேயராகவும், ஆப்பிரிக்காவில் பிறந்த முதல் அமெரிக்க மேயராகவும் ஜோஹ்ரான் மம்தானி வரலாற்று சாதனை படைத்துள்ளார்.
அமெரிக்காவின் நியூயோர்க் நகரத்தின் மேயர் தெரிவு தேர்தலில் முன்னாள் ஆளுநர் ஆண்ட்ரூ கியூமோ மற்றும் குடியரசுக் கட்சியைச் சேர்ந்த கர்டிஸ் ஸ்லிவாவை தோற்கடித்து, மம்தானி ஜனநாயக இடதுசாரிகளின் துணிச்சலான புதிய முகமாக உருவெடுத்துள்ளார்.
மிக குறைந்தளவு நிதியும் பெரிய கட்சி ஆதரவு இல்லாமலும் அவர் பெற்றுள்ள இந்த வெற்றி, நகர அரசியலில் ஒரு வியத்தகு மாற்றத்தைக் குறிப்பதாக சர்வதேசத்தில் பேசப்படுகின்றது.
முதல் இந்திய வம்சாவளி..
அவர் புதிய தலைமுறை தலைவர்களை பிரதிநிதித்துவப்படுத்துகிறார் - இளம், பன்முகத்தன்மை கொண்ட மற்றும் சமூக ஊடகங்களுடன் ஆழமாக இணைக்கப்பட்டவர் எனவும் பாராட்டப்படுகின்றது.

மம்தானியின் அரசியல் தளத்தில் இலவச குழந்தை பராமரிப்பு, பொது போக்குவரத்து விரிவாக்கம் மற்றும் சமத்துவமின்மையை இலக்காகக் கொண்ட பொருளாதார சீர்திருத்தங்கள் ஆகியவை உள்ளடக்கப்பட்டிருந்தன.
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின், இந்திய வம்சாவளி மீதான அதிருப்திக்கு மத்தியிலும் ஆபிரிக்கர்கள் மீதான அதிருப்திக்கு மத்தியிலும் மம்தானியின் இந்த வெற்றி பெரும் திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது எனலாம்.
உண்மையில், ட்ரம்ப் நிர்வாகத்தில் இந்திய வம்சாவளியினருக்கும் ஆபிரிக்கர்களுக்கும் ஒரு கடுமையான எதிர்ப்பு உள்ளது எனவே பொதுவாகவே பேசப்படுகின்றது.
ட்ரம்பின் அச்சுறுத்தல்
இவ்வாறான நிலையில், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், தேர்தலுக்கு முன்னர், முன்னாள் ஆளுநர் ஆண்ட்ரூ கியூமோவுக்கு தனது ஆதரவை வெளிப்படுத்தியிருந்தார்.

அதேவேளை, ஜனநாயகக் கட்சி வேட்பாளர் ஜோஹ்ரான் மம்தானி தேர்தலில் வெற்றி பெற்றால், நியுயோர்க்கிற்கான கூட்டாட்சி நிதியைக் கட்டுப்படுத்துவதாக அச்சுறுத்தியிருந்தார்.
"மம்தானி வெற்றி பெற்றால், நியுயோர்க் நகரம் முழுமையான பொருளாதார மற்றும் சமூக பேரழிவாக மாறும் என்பது எனது வலுவான நம்பிக்கை" என்று ட்ரம்ப் தனது சமூக ஊடக தளத்தில் ஒரு பதிவில் கூறியிருந்தார்.
காத்திருக்கும் ஆபத்துக்கள்..
இருப்பினும், தற்போது மம்தானி வெற்றி பெற்றுள்ள நிலையில், நியுயோர்க் நகரில் மம்தானியுடன் ட்ரம்ப் ஒரு பெரும் அரசியல் மோதலை மேற்கொள்ளுவார் என்று சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

அது மாத்திரமன்றி, மம்தானியின் இந்த வெற்றி, ஒரு குறிப்பிடத்தக்கது என்றாலும் உண்மையான சவால்கள் காத்திருக்கின்றன எனவும் சர்வதேச ரீதியில் பேசப்படுகின்றது.
அமெரிக்காவில் ட்ரம்ப் நிர்வாகத்தில் ஒரு பெரும் திருப்புமுனையாக மாறியுள்ள மம்தானியின் இந்த வெற்றியானது, நியுயோர்க் அரசியல் களத்தை தீவிரப்படுத்தும் எனவும் கூறப்படுகின்றது.
you may like this
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
19 நாள் முடிவில் துருவ் விக்ரமின் பைசன் காளமாடன் படம் செய்துள்ள மொத்த வசூல்... எவ்வளவு தெரியுமா? Cineulagam
முத்துவிடமே நேரடியாக சிக்கப்போகும் ரோஹினி, எப்படி தெரியுமா?.. சிறகடிக்க ஆசை சீரியல் எபிசோட் Cineulagam
பிரித்தானியாவின் மிகப்பெரிய பணக்காரர் காலமானார்: வணிக சாம்ராஜ்யத்தை உருவாக்கிய இந்தியர் News Lankasri