இயக்கச்சி றீ(ச்)ஷாவில் சித்திரை புத்தாண்டில் மக்கள் ஒன்றுகூடுவதற்கான அரிய வாய்ப்பு
கிளிநொச்சி - பச்சிலைப்பள்ளி பிரதேச சபைக்குட்பட்ட இயக்கச்சி பகுதியில் சுமார் 150 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள றீ(ச்)ஷா பண்ணையில் இயற்கை முறையில் விவசாயம் மேற்கொள்ளப்பட்டு தொடர்ச்சியாக பல மாற்றங்கள் நிகழ்த்தப்படுகின்றன.
இந்நிலையில் வரவிருக்கும் சித்திரை புத்தாண்டை, இம்மாதம் 14 ஆம் திகதி றீ(ச்)ஷா பண்ணையில் வெகு விமர்சையாக கொண்டாட திட்டமிடப்பட்டுள்ளது.
சித்திரை புத்தாண்டு கொண்டாட்டம்
சித்திரை புத்தாண்டு கொண்டாட்டத்தை முன்னிட்டு, முட்டி உடைத்தல், தாரா நடை,கயிறு இழுத்தல்,சாக்கோட்டம், பழம் பொறுக்குதல்,நீர் நிரப்புதல் மற்றும் கிளித்தட்டு போன்ற பல பாரம்பரிய விளையாட்டுக்கள் இடம்பெறவுள்ளன.
இதேவேளை கும்மி, கோலாட்டம் மற்றும் பரதம் போன்ற பாரம்பரிய கலைநிகழ்வுகளுடன் DJ இசை நிகழ்ச்சியும் இடம்பெறவுள்ளது.
குறித்த தினத்தில் றீ(ச்)ஷா பண்ணைக்கு சென்று இந்நிகழ்வுகளில் கலந்துகொண்டு அனைவரும் சித்திரை புத்தாண்டை சிறப்பாக கொண்டாடலாம்.






அபாயகரமான முறையில் குழந்தைகளுடன் கடலுக்குள் இறங்கும் புலம்பெயர்வோர்: பதறவைக்கும் காட்சிகள் News Lankasri

உக்ரைனுக்கு எதிராக மீண்டும் அதிரடி முடிவெடுத்த கிம் ஜோங் உன்... 100,000 வீரர்கள் தயார் News Lankasri

மறைந்த தொகுப்பாளர் ஆனந்த கண்ணனுக்காக சூப்பர் சிங்கர் மேடையில் நடந்த நெகிழ்ச்சி சம்பவம்... வீடியோ இதோ Cineulagam

சன் டிவியில் ஒளிபரப்பாகும் 2 ஹிட் சீரியல்களின் மெகா சங்கமம்... எந்தெந்த தொடர்கள் தெரியுமா? Cineulagam
