பிரான்ஸில் விசா இன்றி தவிக்கும் தமிழர்களுக்கு மகிழ்ச்சித் தகவல் - அரசாங்கம் வெளியிட்டுள்ள அறிவிப்பு
பிரான்ஸில் விசா பெற்றுக்கொள்ள முடியாமல் தவித்து வந்த தமிழர்கள் உட்பட பல வெளிநாட்டவர்களுக்கு சாதகமான நிலைப்பாட்டை அந்நாட்டு அரசாங்கம் அறிவித்துள்ளது..
அதற்கமைய தொழிலாளர் பற்றாக்குறையாக உள்ள துறைகளை அரசாங்கம் பட்டியலிட்டுள்ளது.
இந்தப் பட்டியலில் உணவகம் மற்றும் ஹோட்டல் துறையும் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளது.
தொழில் வாய்ப்பு
இதன் காரணமாக பெருமளவு தமிழர்கள் தொழில் வாய்ப்பை பெற்றுக்கொண்டு, அதன் மூலம் விசா பெற்றுக்கொள்ள முடியும்.
உரிமையாளரின் அனுமதியுடன் சட்ட ரீதியாக விசாவை பெற்றுக்கொள்ள முடியும் என்பது சிறம்பம்சமாகும்.
சிறைத்தண்டனை
உணவகத் துறையில் சமையல்காரர்கள், பரிமாறுபவர்கள் மற்றும் சமையலறை உதவியாளர்கள் போன்ற வெற்றிடங்களை பூர்த்தி செய்ய வெளிநாட்டவர்களை இணைத்துக் கொள்ள முடியும்.
இதேவேளை பிரான்ஸ் சட்டத்திற்கு அமைய விசா இல்லாத ஒருவரை பணிக்கு அமர்த்துவது பாரிய குற்றமாகும். 30,000 யூரோ அபராதம் மற்றும் 5 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.





இந்தியா மீது அணுகுண்டு வீச்சு... ட்ரம்பை கொல்ல வேண்டும்: அமெரிக்காவை உலுக்கிய சம்பவத்தில் பகீர் பின்னணி News Lankasri

துளியளவும் பந்தா இல்லாமல் விசேஷத்தை கொண்டாடிய சிவகார்த்திகேயன்.. மகிழ்ச்சியில் குடும்பத்தினர் Manithan

சத்தீஸ்கர் வெள்ளத்தில் சிக்கிய தமிழ் குடும்பம்! சுற்றுலா சென்றபோது 4 பேரும் உயிரிழந்த பரிதாபம் News Lankasri
