ட்ரம்பின் புதிய Gold Card Visa திட்டம் குறித்து வெளியான முக்கிய அறிவிப்பு!
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் முன்மொழிந்த 'கோல்ட் கார்ட்' விசா திட்டத்திற்கான பதிவு பணிகள் ஒரு வாரத்தில் ஆரம்பமாகும் என அமெரிக்க வர்த்தக செயலாளர் ஹாவர்டு லூட்னிக் அறிவித்துள்ளார்.
இந்த திட்டத்தின் கீழ், ஒரு வெளிநாட்டவர் 5 மில்லியன் டொலர் முதலீடு செய்தால், அவருக்கு Green Card, பின்னர் அமெரிக்கக் குடியுரிமை பெறும் பாதை உருவாகும்.
இது தற்போது நடைமுறையில் உள்ள EB-5 திட்டத்தை மாற்றும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.அதில் முதலீடு தொகை $900,000 முதல் $1.8 மில்லியன் வரை இருந்தது.
கோல்ட் கார்ட் விசா
TrumpCard.gov என்ற அதிகாரப்பூர்வ இணையதளம் விரைவில் செயல்படவுள்ளது. இத்திட்டம் மூலமாக மத்திய அரசுக்கு பாரிய வருமானம் கிடைக்கும் எனவும், 200,000 பேர் வாங்கினாலும் அது 1 டிரில்லியன் டொலர் வருமானம் எனவும் லூட்னிக் குறிப்பிட்டுள்ளார்.
இது குறித்து, சட்டவியலாளர்கள் சிலர் மொத்தமாக நடைமுறைப்படுத்துவதற்கு காங்கிரஸின் அனுமதி தேவைப்படும் என எச்சரிக்கின்றனர். ஆனாலும் உலக அளவில் பல செல்வந்தர்கள் இதில் ஆர்வம் காட்டுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |