நாற்பதுக்கு மேற்பட்ட நாடுகளுக்கு இலவச இலங்கை விசா: விஜித ஹேரத் அறிவிப்பு
நாற்பதுக்கு மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்தவர்களுக்கு இலங்கை வருவதற்கான இலவச விசா வசதி விரைவில் அறிமுகப்படுத்தப்படும் என்று அமைச்சர் விஜித ஹேரத் அறிவித்துள்ளார்.
வரவு - செலவுத்திட்டத்தின் குழுநிலை விவாதத்தில் இன்றையதினம்(15) கலந்துகொண்டு உரையாற்றும் போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
அங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர், தற்போதைக்கு 39 நாடுகளைச் சேர்ந்தவர்களுக்கு இலங்கை வருவதற்கான இலவச விசா வசதி வழங்கப்படுகின்றது.
திருத்தங்கள்
அந்தப் பட்டியலில் இன்னும் சில நாடுகளை உள்ளடக்கும் வகையில் திருத்தங்களை மேற்கொண்டுள்ளோம்.

குறித்த பட்டியல் இறுதி செய்யப்பட்டவுடன், வரவு செலவுத் திட்டம் நிறைவடைய முன்னர் நாடாளுமன்றத்தில் அதனை சமர்ப்பிக்கவுள்ளோம் என்றும் அமைச்சர் விஜித ஹேரத் தொடர்ந்தும் அறிவித்துள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
இலங்கை பாடகர் சபேசனுக்கு வாழ்க்கையில் மறக்க முடியாத விஷயத்தை செய்த எஸ்.பி.சரண்... எமோஷ்னலான மேடை Cineulagam
மிக மோசமான வீழ்ச்சி... மில்லியன் கணக்கானோர் பாதிக்கப்படலாம்: எச்சரிக்கும் பொருளாதார நிபுணர்கள் News Lankasri