புதிய இடமாற்றக் கொள்கை ஒன்றை உருவாக்குவதற்கு வடக்கு மாகாண ஆளுநர் இணக்கம்
வடக்கு மாகாண நிர்வாக உத்தியோகத்தர்களுக்கு தனித்துவமான புதிய இடமாற்றக் கொள்கை ஒன்றை உருவாக்கி நடைமுறைப்படுத்துவதற்கு வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் இணக்கம் தெரிவித்துள்ளார்.
அகில இலங்கை நிர்வாக உத்தியோகத்தர்கள் சங்கத்தின் வடபிராந்திய கிளையினருக்கும், வடக்கு மாகாண ஆளுநர் தலைமையிலான குழுவினருக்கும் இடையில் நேற்று (17.2.2026) மாலை ஆளுநர் செயலகத்தில் நடைபெற்ற விசேட கலந்துரையாடலிலேயே இந்தத் தீர்மானம் எட்டப்பட்டது.
தற்போது முகாமைத்துவ அலுவலர்கள் சேவைக்கான பொதுவான இடமாற்றக் கொள்கை பின்பற்றப்பட்டு வருகிறது.
கோரிக்கைகள்
இந்நிலையில், அதிசிறப்பு தர முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர்களுக்கென தனியானதொரு இடமாற்றக் கொள்கை உருவாக்கப்பட வேண்டும் என்ற சங்கத்தின் கோரிக்கையை ஆளுநர் ஏற்றுக்கொண்டார்.

அதற்கமைய, புதிய கொள்கையை உருவாக்குமாறு அதிகாரிகளுக்குப் பணிப்புரை விடுத்தார்.
நிர்வாக உத்தியோகத்தர்களுக்கான கடமைப் பொறுப்புக்களைத் தெளிவாக வரையறுத்தல், சில திணைக்களங்களில் அவர்களுக்குரிய தனிப்பட்ட அலுவலக இட வசதிகளை உறுதி செய்தல் மற்றும் விசேட பயிற்சிகளை வழங்குதல் போன்ற கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன.
நாட்டில் மீண்டும் தலைதூக்கியுள்ள பாதாள உலககும்பலின் நடவடிக்கைகள்! ஜிந்துப்பிட்டிய துப்பாக்கி சூட்டில் புதிய திருப்பம்
உரிய நடவடிக்கை
இவற்றையும் ஏற்றுக்கொண்ட ஆளுநர், உரிய நடவடிக்கைகளை மேற்கொள்வதாக உறுதியளித்தார். உள்ளூராட்சி மன்றங்களின் செயலாளர்களாக கடமையாற்றும் அதிசிறப்பு தர உத்தியோகத்தர்கள், விடுமுறை கொடுப்பனவுகளை பெற்றுக்கொள்வதில் நிலவும் நடைமுறைச் சிக்கல்கள் குறித்தும் ஆளுநரின் கவனத்துக்குக் கொண்டு வரப்பட்டது.

மேலும், செயலாளர்கள் உத்தியோகபூர்வ நாட்குறிப்பை பேணுவதற்குரிய ஏற்பாடுகளைச் செய்வது தொடர்பிலும் சாதகமாகப் பரிசீலிக்குமாறு ஆளுநர் அறிவுறுத்தினார்.
இக்கலந்துரையாடலில் வடக்கு மாகாண ஆளுநரின் செயலாளர், பிரதிப் பிரதம செயலாளர் (நிர்வாகம்), மாகாண பொதுச் சேவை ஆணைக்குழுவின் செயலாளர் மற்றும் அகில இலங்கை நிர்வாக உத்தியோகத்தர்கள் சங்கத்தின் வட பிராந்திய கிளை பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
தேர்தல் பின்னடைவு ஒரு பக்கம்... விற்பனை இல்லாமல் Cybertruck உற்பத்தியை நிறுத்தும் எலான் மஸ்க் News Lankasri
ரூ 87 கோடி இழப்பீடு கோரி பிரித்தானியா உள்விவகார அமைச்சகத்தின் மீது வழக்குத் தொடர்ந்த இலங்கையர் News Lankasri
இஸ்ரேல் என்ற நாடே இருந்திருக்காது... யாரும் அதைச் சொல்ல விரும்புவதில்லை: ட்ரம்ப் வெளிப்படை News Lankasri