இலங்கை - ஜப்பான் இடையே புதிய சுற்றுலா உறவு: தூதுக்குழுவினருடன் விசேட கலந்துரையாடல்!
இலங்கையின் சுற்றுலாத்துறையை மேம்படுத்தும் நோக்கில், இந்நாட்டுக்கு வருகை தந்துள்ள 11 பேர் கொண்ட ஜப்பானியத் தூதுக்குழுவினர் ஜனாதிபதி அலுவலகத்தைப் பார்வையிட்டுள்ளனர்.
இந்த சந்திப்பு நேற்று(14.03.2026) இடம்பெற்றுள்ளது.
சுற்றுலாத்துறை வளர்ச்சி
இலங்கையின் முன்னணி சுற்றுலா நிறுவனமான 'கொனைசன்ஸ் டி சிலோன்' நிறுவனத்தின் ஒருங்கிணைப்பின் கீழ் இந்த விஜயம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இலங்கை மக்களின் வரலாறு, பௌத்த மதத்தின் வருகை மற்றும் வளர்ச்சி, பாரம்பரிய கலாசாரம், ஆயுர்வேத சிகிச்சை முறைகள், சம்பிரதாயபூர்வ பழக்கவழக்கங்கள் மற்றும் பொருளாதாரப் பயிர்கள் குறித்து ஆழமாக ஆராய்ந்து புரிந்து கொள்வதே இத்தூதுக்குழுவின் பிரதான நோக்கமாகும்.

இதன்போது, இரு நாடுகளுக்கும் இடையிலான சுற்றுலாத்துறை உறவுகளை வலுப்படுத்துவதுடன், தாங்கள் பெற்றுக்கொண்ட அனுபவங்களை ஜப்பானிய மக்களுடன் பகிர்ந்து கொள்ளவுள்ளதாகவும் தூதுக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.
குறிப்பாக, ஜப்பானிய சுற்றுலாப் பயணிகளிடையே இலங்கையை ஒரு முதன்மையான சுற்றுலாத் தலமாகப் பிரபல்யப்படுத்துவது குறித்தும் இதன்போது ஆலோசிக்கப்பட்டது.
சர்வதேச அளவில் கொண்டு செல்ல நடவடிக்கை
கொழும்பு, அனுராதபுரம், சிகிரியா, மஹியங்கனை மற்றும் கண்டி ஆகிய பகுதிகளை மையமாகக் கொண்டு, இலங்கையின் தனித்துவமான கலாசார மரபுகளை சர்வதேச அரங்குக்கு எடுத்துச் செல்வது தொடர்பான விடயங்கள் குறித்தும் ஜனாதிபதி அலுவலக அதிகாரிகளுடன் கலந்துரையாடப்பட்டது.

இந்நிகழ்வில் ஜனாதிபதியின் சிரேஷ்ட மேலதிக செயலாளர் ரோஷன் கமகே உள்ளிட்ட சிரேஷ்ட அதிகாரிகள் பலர் கலந்துகொண்டனர்.
ஜனாதிபதி அலுவலகத்துக்கு மேலதிகமாக, இத்தூதுக்குழுவினர் சப்புகஸ்கந்த புராண விகாரை, மிஹிந்தலை, அநுராதபுரம், சிகிரியா, தம்பானை, மல்வத்து மகா விகாரை மற்றும் கொழும்பு துறைமுக நகரம் உட்படப் பல முக்கிய இடங்களுக்கும் விஜயம் செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

கோமதிக்காக குடும்பத்தை ஏமாற்றும் காந்திமதி, வெடிக்கப்போகும் பிரச்சனை... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் Cineulagam
சுரங்கப்பாதை முழுவதும் ஆயுதங்கள்! ஈரான் ரகசியமாக கட்டியெழுப்பிய மிசைல் நகரம்: வீடியோ ஆதாரம் News Lankasri
குணசேகரன் பிளானுக்கு இடையில் அறிவுக்கரசி செய்த பிரச்சனை... எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் புரொமோ Cineulagam
புதிய கம்பெனிக்கு பார்ட்னர் ஆன நிலா, ரூ. 5 லட்சம் ரெடியானதா, ஹேப்பி எபிசோட்... அய்யனார் துணை சீரியல் Cineulagam