போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கை தீவிரம்: ஒரே நாளில் 968 பேர் கைது
ஜனாதிபதியின் பணிப்புரைக்கமைய போதைப்பொருள் பரவலைத் தடுக்கும் நோக்கில் முன்னெடுக்கப்படும் “முழு நாடுமே ஒன்றாக” எனும் தேசிய செயற்திட்டத்தின் கீழ், மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்புகளில் 968 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த நடவடிக்கை நேற்றுமுன் தினம்(13.03.2026) முன்னெடுக்கப்பட்டுள்ளது.
பொலிஸ் ஊடகப் பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, நாடு தழுவிய ரீதியில் 1,015 சோதனைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
விசேட சுற்றிவளைப்பு
இதன்போது கைது செய்யப்பட்டவர்களில் 15 பேருக்கு எதிராகத் தடுப்புக்காவல் உத்தரவு பெறப்பட்டுள்ளதுடன், சட்டவிரோத சொத்துக்கள் தொடர்பான விசாரணைகளின் அடிப்படையில் நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அத்துடன், ஒன்பது பேர் மேலதிக புனர்வாழ்வுக்காக அனுப்பி வைக்கப் பரிந்துரைக்கப்பட்டுள்ளனர்.
இந்தச் சுற்றிவளைப்புகளின் போது சந்தேகநபர்களிடமிருந்து பெருமளவிலான போதைப்பொருள்களையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர். அதற்கமைய, சந்தேகநபர்களிடமிருந்து, 453 கிராம் ஹெரோயின், 656 கிராம் ஐஸ், 903 கிராம் கஞ்சா, 4 ஆயிரத்து 314 கஞ்சா செடிகள், 5 கிராம் குஷ் ரக போதைப்பொருள், 28 கிராம் ஹஷீஷ் ரக போதைப்பொருள், 431 போதை மாத்திரைகள், 313 கிராம் மதனமோதகம் மற்றும் 753 கிராம் மாவா போதைப்பொருள் என்பன கைப்பற்றப்பட்டுள்ளன என்றும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
போதைப்பொருள் கடத்தல்காரர்கள் மற்றும் விநியோகஸ்தர்களை இலக்கு வைத்து இந்தத் தேசிய திட்டம் தொடர்ந்தும் நாடளாவிய ரீதியில் பலப்படுத்தப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.
சுரங்கப்பாதை முழுவதும் ஆயுதங்கள்! ஈரான் ரகசியமாக கட்டியெழுப்பிய மிசைல் நகரம்: வீடியோ ஆதாரம் News Lankasri
ஈரான் போரில் அதிரடி திருப்பம்... ஹார்முஸ் பகுதியில் 5,000 கடற்படை வீரர்களைக் களமிறக்கும் ட்ரம்ப் News Lankasri
குணசேகரன் பிளானுக்கு இடையில் அறிவுக்கரசி செய்த பிரச்சனை... எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் புரொமோ Cineulagam
கோமதிக்காக குடும்பத்தை ஏமாற்றும் காந்திமதி, வெடிக்கப்போகும் பிரச்சனை... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் Cineulagam