கனடாவின் எல்லைப் பாதுகாப்பில் அறிமுகமாகவுள்ள புதிய தொழில்நுட்பம்
கனேடிய எல்லைப் பாதுகாப்புப் பிரிவினர் புதிய தொழில்நுட்பம் ஒன்றை அறிமுகம் செய்ய உள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
எல்லைப் பாதுகாப்பின் போது ஆட்களை இனங்காண முக அடையாளத் தொழில்நுட்பம் (facial recognition) தொலைபேசிகள் ஊடாக பயன்படுத்தப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
முக அடையாளத் தொழில்நுட்பம்
இவ்வாறு முக அடையாளத் தொழில்நுட்பத்தை பயன்படுத்துவதன் மூலம் எல்லைப் பகுதிகளில் நேரத்தை சேமிக்க முடியும் என எல்லைப் பாதுகாப்பு பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
குறித்த தொழில்நுட்பத்தின் மூலம் பயணிகளின் நேரத்தை சேமிக்க முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய தொழில்நுட்பத்தை அறிமுகம் செய்வதற்காக 25 மில்லியன் டொலர்கள் வரையில் செலவிடப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
மேலும், பயணிகளின் கடவுச்சீட்டில் உள்ள புகைப்படம், பயனர்களின் அலைபேசியில் எடுக்கப்பட்ட செல்ஃபியுடன் (Sefie) ஒப்பீடு செய்யப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

செம்மணி அணையா விளக்கு போராட்டம் சொல்லும் செய்தி என்ன..! 21 மணி நேரம் முன்

பிடிவாதத்தால் எதையும் சாதிக்கும் பெண் ராசியினர் இவர்கள் தான்... உங்க ராசியும் இதுல இருக்கா? Manithan
