புதிய வரிக் கொள்கை தொடர்பான கேள்விகள்! பதிலளிக்கத் தயாராகும் அரசாங்கம்
புதிய வரி தொடர்பில் முன்வைக்கப்பட்டு வரும் கேள்விகளுக்கு அடுத்த நாடாளுமன்ற அமர்வில் விரிவான பதில் வழங்கப்படும் என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய(Ranjith Siyambalapitiya) தெரிவித்தார்.
சபையில் நேற்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச எழுப்பிய கேள்வியொன்றுக்குப் பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
நாடாளுமன்ற வழி வகைகள்
அது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
வரி தொடர்பில் எதிர்க்கட்சித் தலைவர் சபையில் கேள்வி எழுப்பினாலும் இதற்கு முன்னர் பல தடவைகள் நான் இத்தகைய அவரது கேள்விகளுக்குப் பதிலளித்துள்ளேன்.
நாடாளுமன்ற வழி வகைகள் தொடர்பான தெரிவுக்குழு மூலம் அது தொடர்பில் அறிக்கையொன்று வெளியிடப்பட்டுள்ளது.
அந்த அறிக்கை தொடர்பான விரிவான பதில் ஒன்றை நாம் விரைவில் சபையில் முன் வைக்கவுள்ளோம். எதிர்க்கட்சித் தலைவர் எழுப்பிய அனைத்து கேள்விகளுக்குமான விடயங்கள் அதில் உள்ளடக்கப்பட்டுள்ளன.
அதனைத் தவிர அது தொடர்பில் விவாதத்திற்கு செல்ல வேண்டுமானால் எதிர்க்கட்சித் தலைவர் அதை மேற்கொள்ள முடியும்.
அதேவேளை வங்கிகள் மற்றும் நிதி தொடர்பில் நாம் பதில்களை வழங்கும்போது அதற்கான சட்டங்களை பின்பற்ற நாம் கடமைப்பட்டுள்ளோம் என குறிப்பிட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |





ஆட்டத்திற்கு என்ட் கார்ட் போட்ட மக்கள்.. இந்த வாரம் வெளியேறும் சின்னத்திரை பிரபலம் யார் தெரியுமா? Manithan

15 வயதில் வீட்டின் அறையில் அடைத்த பெற்றோர்! 27 ஆண்டுகளுக்கு பின் 47 வயதில் பெண் மீட்பு News Lankasri

கனடாவில் வாழ்வாதாரத்திற்காக டாக்சி ஓட்டும் இராணுவ வைத்தியர் - இந்திய பெண் பகிர்ந்த அனுபவம் News Lankasri
