பாடசாலை மாணவர்களுக்காக புதிய நடைமுறை அறிமுகம்
பாடசாலை கட்டமைப்பிற்குள் சேரும் ஒவ்வொரு மாணவருக்கும் ஒரு தனித்துவமான தரவுக் கோப்பு தயாரிக்கப்படும் எனவும் ஒரு தனித்துவமான அடையாள அட்டை அறிமுகப்படுத்தப்படும் எனவும் உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
2026 ஆம் ஆண்டில் நடைமுறைப்படுத்த திட்டமிடப்பட்டுள்ள கல்வி மாற்றத்தின் கீழ், கல்வித்துறை, கல்விசாரா ஊழியர்கள், சிறுவர்கள் மற்றும் பாடசாலை உட்பட கல்வித்துறையில் உள்ள அனைத்து தகவல்களையும் உள்ளடக்கிய ஒரு தேசிய கல்வி தரவு முகாமைத்துவ அமைப்பு உருவாக்கப்படவுள்ளது.
இது தொடர்பாக உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சரும் பிரதமருமான ஹரிணி அமரசூரிய தலைமையில் நேற்று அமைச்சில் நடைபெற்ற கலந்துரையாடலின் போது முடிவு செய்யப்பட்டது.
தரவு கட்டமைப்பு
தேசிய பிறப்புச் சான்றிதழ்கள், தேர்வு முடிவுகள், திறன்கள் உள்ளிட்ட பிள்ளைகளின் அனைத்து தரவுகளையும் இந்த அமைப்பில் சேர்க்க இங்கு யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.

2026 ஆம் ஆண்டில் மேற்கொள்ளப்படவுள்ள கல்வி மாற்றத்திற்கு ஏற்ப, பாடசாலைகளில் மாணவர்களை சேர்ப்பது, ஆசிரியர் மற்றும் அதிபர் வெள்ளிடங்களை அடையாளம் காண்பது, நியமனங்கள், பதவி உயர்வுகள், இடமாற்றங்கள் செய்தல், தொடர்ச்சியான மதிப்பீட்டு முறையை செயல்படுத்துதல் மற்றும் பாடசாலை பௌதீக வளங்களை மேம்படுத்துதல் போன்ற செயல்முறைகளை இந்த தரவு அமைப்பு எளிதாக்கும் என்று பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.
தகவல் தொழில்நுட்பப் பிரிவு
அடுத்தாண்டு முதலாம் ஆண்டு முதல் மற்றும் 6ஆம் ஆண்டு வகுப்புகளில் சேரும் மாணவர்களின் அடிப்படையில் இந்த தரவு அமைப்பைத் தொடங்குவது குறித்தும் இங்கு விவாதிக்கப்பட்டுள்ளது.

தேசிய கல்வி தரவு மேலாண்மை அமைப்பின் வளர்ச்சிக்கு தேவையான ஆதரவை இலங்கை விமானப்படையின் தகவல் தொழில்நுட்பப் பிரிவு வழங்கும் என்று அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ராஜி பேச்சை கேட்டு பல வருடத்திற்கு பிறகு அண்ணன் வீட்டிற்கு சென்ற கோமதி, கடைசியில்... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 Cineulagam
திமுகவில் இணைந்த அதிமுக முன்னாள் அமைச்சர்; அதிமுக கூட்டணியில் டிடிவி - அதிர்ச்சியில் விஜய் News Lankasri
சரிகமப லிட்டில் சேம்ப்ஸ் சீசன் 5 போட்டியாளர் மித்ரா அம்மா-அப்பாவிற்கு கிடைத்த பெரிய உதவி... Cineulagam